tamilnadu

கிருஷ்ணகிரி ,கடலூர் முக்கிய செய்திகள்

ஸ்ரீவித்யா மந்திர் கல்லூரியில் பாடப் புத்தக தொகுப்பு வெளியீடு

கிருஷ்ணகிரி, செப். 7- கிருஷ்ணகிரி ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரியில் இயங்கும் தமிழ்நாடு அரசுப் பணி தேர்வு வாரிய பயிற்சி மையத்தில் போட்டித் தேர்வுக்கான பாடப்புத்தக தொகுப்பு வெளி யீட்டு விழாவும், குரூப் 1 முத ல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் வரவேற்றார். பயிற்சி மையம் தயா ரித்த பாட புத்தக தொகுப்பை கல்லூரி முதல்வர் அருள் வெளியிட்டார். புத்தகத் தொகுப்பின் முதல் பிரதியை தமிழ்த்துறை தலைவர் ராஜா பெற்றுக் கொண்டார். விழாவில் குரூப் 1 முதல் நிலைத்  தேர்வில் வெற்றி பெற்ற மாணவி பூரணி, குரூப் 2 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற  சரண்யா, தேன்மொழி, குருப் 3இல் வெற்றி  பெற்ற சுபா, பிரேமா, தேன்மொழி, தோட்டக்  கலை தேர்வில் வெற்றி பெற்று தற்போது பணி யில் உள்ள சத்தியமூர்த்தி ஆகியோருக்கு பரிசுகள் வழிங்கி பாராட்டப்பட்டது.

ஆராய்ச்சி படிப்பிற்கு நுழைவுத் தேர்வு 260 பேர் எழுதினர்

கடலூர், செப். 7- கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,   வேலூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள கல்லூரிகள் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் எம்பிஎல்.,பிஎச்டி என்ற ஆராய்ச்சி படிப்பினை படிக்க விரும்புபவர்கள் நுழைவுத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, நுழைவுத்தேர்வு கடலூர் அரசு கலைக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 260 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். காலை 11 மணி முதல் 12.30 மணி வரைக்கும்  தேர்வுகள் நடைபெற்றது. தேர்வுப்பணிகளை கல்லூரி முதல்வர் ப.குமரன் தலைமையிலான பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர். இத்தேர்வு முடிவுகள் பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டு அதில் தேர்வானவர்கள் மட்டுமே பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட எந்தக் கல்லூரியில் வேண்டுமானாலும் ஆராய்ச்சி படிப்புகள் படிக்க முடியும் என்று ப.குமரன் தெரிவித்தார்.

;