tamilnadu

img

அடிப்படை வசதியில்லாத கொரட்டூர் ரயில் நிலையம்

அம்பத்தூர், டிச. 25- கொரட்டூர் ரயில் நிலையம் வழியாக தினசரி 160க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும், 50க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்தை கொரட்டூரைச் சுற்றி யுள்ள 20க்கும் மேற்பட்ட நகர்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கொரட்டூர் பகுதியில் சிறு, குறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் ரயில் மூலமாக வேலைக்கு வந்து செல்கின்றனர்.  இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கொரட்டூர் ரயில் நிலை யத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். கொரட்டூர் ரயில் நிலையத்தை தினசரி 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்றனர். இங்குள்ள நடைமேடைகளில் உள்ள மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவில் ரயில் நிலையம் முழுவதும் இருளில் மூழ்கிக் கிடக்கி றது. இங்குள்ள நடைமேடை முழுவ தும் மேற்கூரை அமைக்கப்படாததால் மழைக் காலங்களில் பயணிகள் ரயிலில் ஏறும், இறங்கும்போதும் மழையில் நனைந்து கொண்டே செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.  பெண்கள் தாய்ப்பால் ஊட்டுவ தற்காக அமைக்கப்பட்டுள்ள அறை யின் கதவு பூட்டு உடைந்துள்ளதால், தாய்ப்பால் கொடுக்க பெண்கள் உள்ளே செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும் குடி நீர் தொட்டிகள் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதனால் பயணிகள் குடிநீர் அருந்த முடியாத நிலை உள்ளது. இங்குள்ள கழிப்பறை பயணிகள் பயன்பாட்டுக்கு இல்லாமல் மூடியே கிடக்கிறது. இதனால் பெண்கள், முதியோர் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.  ரயில் நிலைய நடைமேம்பாலம் சேதமடைந்துள்ளது. இதனை பயன்படுத்தும் பயணிகள் அச்சத்து டன் சென்று வருகின்றனர். ரயில்வே  காவல் துறையினரும் ரயில்வே பாது காப்பு படையினரும் இந்த பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் அடிக்கடி ரயில் நிலை யத்தில் திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறு கின்றன. கண்காணிப்புக் கேமரா வசதிகள் இல்லாததால் குற்றவாளி களை பிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சுரங்கப்பாதை பணி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டி யுள்ளது. இதுகுறித்து பலமுறை ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கா மல் அலட்சியமாக உள்ளனர். இனியா வது கொரட்டூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை நிறை வேற்றி, கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;