tamilnadu

காஞ்சிபுரம் ,சென்னை மற்றும் திருவள்ளூர் முக்கிய செய்திகள்

குடிநீர் தட்டுப்பாட்டை போக்குக

கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்

காஞ்சிபுரம், ஜூன், 28-  குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குருவி மலையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றது. சிறு காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமை யில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், குருவி மலையில் தெரு மின் விளக்கு, கால்வாய்கள் சீரமைத்தல், சமுதாய கூடத்தை  மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கைப்பம்பு மற்றும் ஆழ்துளை கிணறுகளை சீரமைக்க வேண்டும், ஏரி, குளம், குட்டைகளை தூர்வார வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தினர்.  இந்தக் கூட்டத்தில் குருவிமலை கிளைச் செயலாளர் வி.சிவப்பிரகாசம், நிர்வாகிகள் பழனி,வேலு, சீனிவாசன், அரிகிருஷ்ணன், ரமேஷ், சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
 

சிறுகுறு நடுத்தர தொழில்கள் ஆதரவு இயக்கம்  துவக்கம்  

சென்னை, ஜூன் 28- சிறு, குறு, நடுத்தர தொழில்கள் இந்திய பொருளாதார  வளர்ச்சிக்கும் ஓட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திற்கும்  முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்ததுறையினர் நிதித் தட்டுப்பாடு, கடன்,  தொழிலை விரிவாக்குதல் உள்ளிட்ட விஷயங்களில்  கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.   இந்த நிலையில் இந் நிறுவனங்களை மேம்படுத்த ஆதரவு மற்றும் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்த பணியை பொதுத்துறை வங்கிகளிடம் மத்தியநிதிய மைச்சகம் ஒப்படைத்துள்ளது. சிறு,குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் வங்கிகளில் வாங்கியுள்ள கடன்கள், அவர்களிடமிருந்து வரவேண்டிய வாராக்கடன்கள், இந்த நிறுவனங்களின்  வங்கிகணக்குகள் ரிசர்வ் வங்ஙகி வழிகாட்டுதல் படி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட மறு  சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் எத்தனை சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை இந்த பிரச்சாரம் சென்றடைந்துள்ளது ஆகியவை குறித்த விவரங்களை வங்கிகள் தெரிவிக்கவேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் செயலபாடுகள் குறித்து வாரம் ஒருமுறை அறிக்கை அளிக்கவேண்டும் என்றும் நிதித்துறை கூடுதல் செயலர் ரவி மிட்டல் எஸ்பிஐ மற்றும் இதர பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது

திருவள்ளூர், ஜூன் 28-  பள்ளிப்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதியில், கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து கடந்த 12 ஆம் தேதி மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் அப்பகுதி யில் திடீர் ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது காலம்பாக்க த்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் கள்ளச் சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த கிருஷ்ணனின் மனைவி மாரியம்மாளை கைது செய்தனர். அவரிடம் இருந்து 105 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது. இதையடுத்து மாரியம்மாளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு காவல்துறை அதிகாரி பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து மாரியம்மாளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறை யில் அடைக்க ஆட்சியர்  மகேஸ்வரி உத்தரவிட்டார். பின்னர் மாரியம்மாளை காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.

இன்று மின்தடை

பொன்னேரி, ஜூன் 28-  பொன்னேரி துணை மின்நிலையத்திலிருந்து வரும் மின் வழித்தடங்களில் சனிக்கிழமையன்று (ஜூன் 28) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.  இதனால், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டி.வி.புரம், வெண்பாக்கம், தட பெரும்பாக்கம், பொன் நகர், உத்தண்டி கண்டிகை, எலவம்பேடு, மேட்டுப்பாளை யம், அனுப்பம்பட்டு, ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோ கம் தடைபடும் எனமின்வாரி யம் அறிவித்துள்ளது.

;