tamilnadu

img

கருத்துரிமை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் நீதியரசர் து.அரிபரந்தாமன் கருத்து

சென்னை, ஜன. 16- கருத்துரிமையை ஒரு போதும் பறிக்க முடியாது. அது  வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் என்று சென்னை உயர்  நீதிமன்ற மேனாள் நீதியரசர் து.அரிபரந்தாமன் கூறினார். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (ஜன.16) பொங்கல் தமிழர் திருநாள் குடும்ப விழா நடைபெற்றது. நாடகம், ஆடல், பாடல், போட்டி களோடு விமர்சையாக நடை பெற்ற இவ்விழாவில் து.அரி பரந்தாமன் பேசியதன் சுருக்கம் வருமாறு: தைப்பொங்கல் தமிழர் திருநாள். சாதி, மதம் துறந்து, அனைவரும் கொண்டாடும் அறுவடைத் திருநாள். தமிழ கத்திலிருந்து கேரளம் சென்ற  ஒரு தலைவர், ஓணம் பண்டி கையை வாமண ஜெயந்தி என்றார். அதனை அங்குள்ள மக்கள் நிராகரித்தனர். தற்போது  தமிழர் திருநாளான பொங்கலை  சங்கராந்தியாக மாற்ற முயற்சிக்  கின்றனர். அதனை நிராகரிக்க வேண்டும. சாதி, மத வேறு பாடற்ற புதுப்புது திருநாட்களை மக்கள் கொண்டாட வேண்டும். அரசியலமைப்புச் சட் டத்தை, உச்சநீதிமன்றத்தை விமர்சித்து எழுத அரசியல மைப்புச் சட்டமும் அனுமதிக்கி றது. உச்சநீதிமன்றமும் அனு மதிக்கிறது. ஆனால் அரசை எதிர்த்து எழுதக்கூடாது, கோலம் போடக் கூடாது என்கிறார்கள். எதிர்த்துப் பேசினால்தான் உண்மைகள் வெளிப்படும். குடிநீர், கழிவுநீரகற்று வாரி யத்தை அரசு தனியார்மய மாக்கும் ஆபத்து உள்ளது.  லாபம் ஈட்டும் நிறுவனங்களை யும் தனியாருக்கு விற்கிறார் கள். இதற்கெதிரான போராட்டத்தை யும் ஒன்றுபட்டு நடத்த வேண்டும்.  கழிவு நீரகற்றும் பணியிலி ருந்து என்றைக்கு மனிதர்கள்  முழுமையாக விடுபடுகிறார் களோ அன்றைக்குதான் இத் தொழிலில் உள்ளவர்களுக்கு உண்மையான திருநாளாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
கட்டமைப்பு மாற்றம்
“ஒவ்வொரு ஆண்டும் எல்லையோர பாதுகாப்பு படை யினரைவிட, பணியின்போது கழிவுநீரகற்றும் தொழி லாளர்கள் அதிகளவு இறக்கின் றனர். கழிவு நீர்த்தடங்களை எந்திரமயமாக்க, முழு கட்ட மைப்பையும் மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வரு கின்றன” என்று மக்கள் பொறி யாளர் சங்கத்தின் தலைவர் இரா.ஜெய்சங்கர் கூறினார்.
இலவச பயிற்சி வகுப்புகள்
சிஐடியு மாநிலப் பொதுச்  செயலாளர் ஜி.சுகுமாறன் பேசு கையில், “தொழிலாளர்களின் குழந்தைகள் அனைத்து வகை யான போட்டித் தேர்வுகளை  எதிர்கொள்ள, மாவட்டந் தோறும் இலவச பயிற்சி வகுப்பு கள் தொடங்கப்படும். குடிநீர்  மற்றும் கழிவுநீரகற்று வாரி யத்தில் 258 தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ததுபோல், மேலும் 400க்கும் அதிகமான தொழிலாளர்களை பணிநிரந்த ரம் செய்ய அனைத்து நடவ டிக்கைகளும் மேற்கொள்ளப் படும்” என்று கூறிய அவர், “ஜன.27 அன்று நடைபெறும் சிஐ டியு அகில இந்திய மாநாட்டு  பொதுக்கூட்டத்தில் தொழிலா ளர்கள் குடும்பத்தோடு பங் கேற்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார். இந்நிகழ்வில் இயக்குநர் லெனின்பாரதி, கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் ஜி.செல்வா, சங்கத்தின் பொதுச்  செயலாளர் எம்.பழனி, பொரு ளாளர் டி.ஞானப்பிரகாஷம், துணைத்தலைவர் சி.சத்ய நாதன், இ.ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;