சென்னை, மே 5- தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டில் முதலாம் ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்புக்கு திங்கட்கிழமை (மே 6) முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்க விரும்பு வோர் www.tngasa.in என்ற இணையதள முகவரி யில் பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயி லாக விண்ணப்பிக்க இய லாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 48, பதிவுக் கட்டணம் : ரூ. 2, எஸ்சி மற்றும் எஸ்டி பிரி வினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதி வுக் கட்டணம் : ரூ. 2 மட்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். இணைய தளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாண வர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெய ரில் மே 6 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூல மாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம்.
மாணவர் சேர்க்கை வழி காட்டி மற்றும் கால அட்ட வணையை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். தொடர்பு எண்: 044 – 24343106 / 24342911 என்ற தொலை பேசியில் தொடர்பு கொள்ள லாம் என்று கல்லூரிக் கல்வி இயக்கு நர் தெரிவித்துள்ளார்.