tamilnadu

img

நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் – டிஎன்பிஎஸ்சி  

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்கள் தனது நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.  

தமிழக அரசின் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.  

இதுதொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,  

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் தவறாமல் இணைக்க வேண்டும். ஆதார் எண்ணை இணைத்தவுடன், எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  

மேலும், இதுகுறித்து விளக்கம் ஏதேனும் தேவைப்படுமானால் 18004190958 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி அல்லது helpdesk@tnpscexams.in/ grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை தொடர்பு கொள்ளலாம் என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;