tamilnadu

img

ஊராட்சி தலைவர்களுக்கு அறிமுகப் பயிற்சி

திருவண்ணாமலை, ஜன. 22- ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெ டுக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான அறிமுகப் பயிற்சி புத னன்று நடைபெற்றது. இந்து சமயம் மற்றும்  அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் அறிமுக பயிற்சியை துவக்கி வைத்தார், மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி,  ஊராட்சிகள் துறை அலுவலர்கள் மற்றும் பிரதி நிதிகள் பலர் பங்கேற்றனர். இந்த பயிற்சியில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், ஜவ்வாது மலை ஒன்றி யங்களைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள்,  துணைத் தலைவர்களும் கலந்து கொண்ட னர். இந்த பயிற்சியில், துரிஞ்சாபுரம், போளூர்,  கலசப்பாக்கம் ஒன்றியங்களைச் சேர்ந்தவர்க ளும், ஜனவரி 24 ஆம் தேதி நடைபெறும் பயிற்சியில் செங்கம், புதுப்பாளையம், தண்ட ராம்பட்டு ஒன்றியங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கிறார்கள். மேலும், செய்யாறில் நடைபெற்ற  பயிற்சி யில் ஆரணி, செய்யாறு, வெம்பாக்கம் ஒன்றி யங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட னர். சேத்துப்பட்டு, தெள்ளார், வந்தவாசி ஒன்றியங்களைச் சேர்ந்தவர்களும், ஜன.24 அன்று பெரணமல்லூர், அனக்காவூர், மேற்கு  ஆரணி ஒன்றியங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க வேண்டும். இதில் ஊரகப் பகுதிகளின் முழுமையான வளர்ச்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு, ஊராட்சி நிர்வாகத்தை திறம்பட நடத்துதல், கிராம சபை மற்றும் ஊராட்சி கூட்டங்கள் நடத்துதல், செலவினம், மின்னணு பரிமாற்ற முறையில் பணப் பரி வர்த்தனைகளை மேற்கொள்ளுதல், ஊராட்சி களில் அடிப்படை வசதிகளை செய்து தருதல்  உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படு கிறது.

;