விழுப்புரம், ஜூன்.14- விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வெள்ளி யன்று நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் சிவா அறிமுகம் நடைபெற்றது.
அறிமுக கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் பொன். கௌதம சிகாமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சரும் திமுக மாநில துணை பொதுச்செயலாளருமான கே.பொன்முடி கலந்து கொண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவாவை கட்சி செயல் வீரர்களுக்கு அறிமுகப் படுத்தி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சே.புஷ்பராஜ், மாவட்டத் துணைச் செய லாளர் தயா.இளந்திரையன், நகர செயலாளர் சர்க்கரை, மகளிர் அணி மாநில நிர்வாகி தேன்மொழி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.