tamilnadu

750 சுய உதவிக்குழு பெண்களை ஒருங்கிணைத்து சர்வதேச மகளிர் தினவிழா

வேளச்சேரியில் ஆஷா நிவாஸ் சமூகசேவை மையம் தென் சென்னை பகுதியில் உள்ள 750 சுய உதவிக்குழு பெண்களை ஒருங்கிணைத்து சர்வதேச மகளிர் தினவிழாவை நடத்தியது.  இதில் பெண்களின் கலை நிகழ்ச்சிகள், கை வினை பொருள் கண்காட்சி நடைபெற்றது. ஆஷா நிவாஸ் இயக்குனர் டாக்டர். குரியன் தாமஸ், வேளச்சேரி கார்ப்பரேஷன் வங்கி மேலளார் இந்திரா, ஆஷா நிவாஸ் முதன்மை சமுதாய வளர்ச்சி அலுவலர் செல்வி லில்லி ஜோஸ்பின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த குழுக்களுக்கு விருது வழங்கி பாராட்டினர்.