tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

பணவீக்க விகிதம் 6 சதவீதத்திற்கு குறைவாகச் சென்றுவிட்டது என்று ஒன்றிய பாஜக ஆட்சி யாளர்கள் மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இப்போதும் 5.5சதவீத பணவீக்கம் என்பது மிக அதிகமே. குறிப்பாக இது, உணவுப் பொருட்களின் அதீத விலை உயர்வு காரணமாக பெருமளவில் குறையாமல் நீடிக்கிறது. உணவுப் பணவீக்கம் மட்டும் கடந்த மாதம் 6.61 சதவீதமாக இருந்தது தற் போது 8.7சதவீதமாக அதிகரித்துள்ளது. அனை த்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மற்றும் காய்கறிகளின் விலைகள் கடுமையாக அதிகரித்திருப்பதுதான் இதற்கு காரணம்.