சென்னை, மே 10- தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை யில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல பகுதிகள் கருஞ் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் அதிக ரித்துக் கொண்டே வருவதோடு பாதித்த வர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருவதால் சென்னை மாநக ராட்சி தொடர்ந்து சிவப்பு மண்டலமாகவே இருந்து வருகிறது. ஆரம்பத்திலிருந்து ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முதலிடத்திலிருந்து வந்தது. பின்னர் திரு.வி.க நகர் மண்டலம் முதலி டத்திற்கு சென்றது. பிறகு கோடம்பாக்கம் மண்டலம் முதலிடத்தை பிடித்தது. இதனால் கோடம்பாக்கம் மண்டலம் கருஞ்சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
சென்னை எழும்பூரில் பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. சென்னை சூளை மேட்டைச் சேர்ந்த 2 மாதம் ஆன குழந் தைக்கு பாதிப்பு உள்ளது. வண்ணா ரப்பேட்டை, நெற்குன்றத்தைச் சேர்ந்த 3 வயதுடைய 3 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 7 குழந்தைக ளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ராயபுரம் மண்ட லத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்து முதலி டத்தை மீண்டும் பிடித்துள்ளது. கோடம் பாக்கம் 563 ஆகவும் திரு.வி.க நகரில் பாதிப்பு 519 ஆகவும் உயர்ந்த தால் ராய புரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் ஆகிய 3 மண்டலங்களும் கருஞ்சிவப்பு மண்டல மானது. இத்தகைய சூழ்நிலையில் சிறப்பு அதிகாரி ஜெ. ராதாகிருஷ்ணன் வெளியிட்டி ருக்கும் அறிக்கையில்,“நோய்த் தொற்று இங்கிருந்து தான் வந்தது என்று உறுதி யாகச் சொல்ல முடியாது ;
எங்கிருந்து வேண்டு மானாலும் வரலாம் ; சோதனைகளை அதிகப் படுத்தி பரவலைக் குறைப்பதே நோக்கம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அறிகுறிகள் இன்றி தொற்று ஏற்பட்டு வருகிறது ; அடுத்த ஒருவார காலத்திற்கு தொற்று எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் ; எந்த அறிகுறியும் இல்லாதவர்க ளுக்கு மத்திய, மாநில அரசின் அறிவுரைப்படி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருக்கிறார்.