19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.102.50 உயர்த்தப்பட்டு ரூ.2355.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மாற்றி வருகின்றனர். அதேபோல் இந்த மாதத்திற்கான வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.102.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
19 கிலோ எடையுள்ள வர்த்தக பயன்பாட்டுக்கான இந்த சிலிண்டரின் விலை ரூ.2355.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.
5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 655 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.