tamilnadu

img

கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துக

முதலமைச்சருக்கு சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் கடிதம்

சென்னை, மே 29 - சென்னையில் கொரோனா பரி சோதனையை அதிகப்படுத்த வேண்டும். தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களையும், பிற  நோயாளிகளையும் மருத்துவமனை களில் அனுமதித்து சிகிச்சை அளிக்க  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் தமிழக முதலமைச்ச ருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. ராய புரம், திரு.வி.க.நகர், தண்டை யார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட அனைத்து  மண்டலங்களிலும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டி ருக்கின்றது. ஆனாலும், சமூகப்  பரவல் என்று அரசு அறிவிக்க வில்லை. ஜுன், ஜுலை மாதங்களில் தொற்று மேலும் அதிகமாகப் பரவும்  என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்ற னர். இதனால் மக்கள் மத்தியில் கடு மையான அச்ச உணர்வு ஏற்பட்டு வருகின்றது. சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மாநகராட்சி நிர்வாகம், அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கா மல் வீட்டிலேயே தனி மைப்படுத்தி இருக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி விடுகிறது. அவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பவர்கள் எந்த அறிகுறியுமில்லாமலி ருந்து திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரண மடைகின்றனர். எனவே, தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட அனைவரையும் மருத்துவரின் கண்காணிப்பில் மருத்துவமனை யில் அனுமதிக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள்

பள்ளி மற்றும் கல்லூரி  வளாகங்களில் உருவாக்கப் பட்டுள்ள முகாம்களில் எவ்விதமான அடிப்படை வசதிகளும், அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் இல்லாததால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, பள்ளி, கல்லூரிகளைத் தவிர்த்து அந்தந்த மண்டலங்களில் உள்ள தனி யார் மருத்துவமனைகளை கொரோனா தொற்று நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க பயன்ப டுத்த வேண்டும். இதுகுறித்து கடந்த  4ந் தேதியிட்ட கடிதம் மூலம் வலி யுறுத்திருந்தோம். ஆனால், அத்த கைய நடவடிக்கைகளை சென்னை மநாகராட்சி மேற்கொள்ளவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு தனியார் மருத்துவமனைகளை தேவையான அளவிற்கு கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.

அனைவருக்கும் பரிசோதனை

கொரோனா தொற்று பாதிக்கப் பட்டவர் வீட்டில் உள்ள  அனைவரையும் பரிசோ திக்காமல், வீட்டிற்கு ஒரு வருக்கு மட்டும்தான் பரி சோதனை செய்யப்படும் என்று பரிசோதனை மையங்களுக்கு செல் வோரை திருப்பி அனுப்பு கின்றனர். இதனால் வீட்டி லுள்ள மற்றவர்கள் தொற்று  குறித்து ஏதுமறியால் திடீரென இறக்க நேரிடுகிறது. உதாரணத்திற்கு, கொளத்தூர் சிவசக்தி நகர் விரிவாக்கம் 3வது  குறுக்கு தெருவைச் சேர்ந்த சசிகலா வின் (வயது 41) மகனுக்கு தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அப்போது, சசிகலா விற்கு உடனே பரிசோதனை செய்ய  மறுத்ததால் அவர் மரணமடைந்துள் ளார். அதிகாரிகன் அலட்சியத்தால் நடைபெற்ற இந்த மரணம் குறித்து  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  உயிரிழந்த சசிகலா குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்க வேண்டும். கொரோனா தொற்று பாதிப்பு ஏற்  பட்டவர்களின் அருகாமை வீடுகள்  மற்றும் அந்த தெருவில் உள்ளவர்க ளுக்கு பரிசோதனை செய்வதில்லை.  தொற்றின் தொடர்ச்சியை அறிந்து  தடுப்பதற்கு பதில் அறிகுறி இருப்ப வர்களுக்கு மட்டுமே பரிசோதனை என்பது ஏற்புடையதல்ல. இந்திய  மருத்துவ ஆராயச்சி குழுமம் தமிழ்நாட்டில் எடுக்கும் பரிசோத னையின் அளவு போதுமானதல்ல என்றும், ஒரு லட்சம் பேரில் 100 பேருக்கு என்ற வகையிலும், சென்னையில் மட்டுமே நாள்  ஒன்றுக்கு 10 ஆயிரம் பரிசோதனை கள் மேற்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளது. எனவே, தொற்று பதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா தொற்று இல்லாத  இதர நோயினால் பாதிக்கப்படு பவர்கள் மற்றும் தொடர் சிகிச்சை பெறுபவர்களுக்கு தனியார் மருத்து வமனைகள் சிகிச்சை அளிக்க மறுக்கின்றன. பிரபலமான மருத்துவ மனைகள் 50 ஆயிரம் முதல் ஒரு  லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்தால்தான் மருத்துவ மனைக்குள் அனுமதிக்க முடியும் என்று கட்டாயப்படுத்துகின்றன. இதனை அரசு தடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் நகல் சென்னை கொரோனா தடுப்பு  சிறப்பு அதிகாரி, சென்னை மாநக ராட்சி ஆணையருக்கும் அனுப்பப் பட்டுள்ளது.