tamilnadu

img

திருவொற்றியூர் பகுதியில் குட்டைபோல் தேங்கி நிற்கும் மழை நீர்

சென்னை, செப். 19-  திருவொற்றியூர் மழைநீர் கால்வாயில் அடைப்பை சரி செய்யாததால் புதனன்று (செப்.18) இரவு பெய்த மழையால் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது. வட சென்னை திருவொற்றியூர் மேற்குப் பகுதியில் புதனன்று  இரவு பெய்த மழையால்  முல்லை நகர், ஜெய் ஹிந்த் நகர், கார்கில் நகர், ஜோதி நகர், சக்திகணபதி நகர், சரஸ்வதிநகர் சிவசக்தி நகர், டி.கே.எஸ் நகர் மதுரா நகர், சத்திய மூர்த்தி நகர் ஆகியே பகுதிகளில்  உள்ள மழைநீர் கால்வாயில்கள் அடைப்பு ஏற்பட்டுள்ளதால்  கழிவுநீருடன் மழை நீர் சேர்ந்து குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதிமக்கள் அவதிப்படுகின்றனர்.  இது குறித்து பொதுமக்கள்  கூறுகையில், ‘குடியிருப்பு களுக்குள் மழைநீர் புகுந்து விடாமல் இருக்க, நிரந்தர கழிவுநீர் மழைநீர் அகற்றும் திட்டம் தயார் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில்  தற்காலிகமாக கால்வாய் தூர்வாரி,  மோட்டார் வைத்து தண்ணீரை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறுகின்றனர்.

;