tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழ்நாடு, புதுவையில் பரப்புரை ஓய்ந்தது
நாளை வாக்குப்பதிவு!

சென்னை, ஏப்.17- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த  நான்கு வாரம் அனல் பறக்க நடந்து வந்த  தேர்தல் பரப்புரை புதன்கிழமை மாலை  6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமையன்று (ஏப்.19) வாக் குப்பதிவு நடைபெறுகிறது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்க ளவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலை யில், முதற்கட்டத் தேர்தல் அறிவிக்கப் பட்ட தமிழ்நாடு (39 தொகுதிகள்), புதுச்சேரி (1 தொகுதி) உட்பட 21 மாநி லங்களில் மொத்தம் 95 தொகுதிகளுக்கு  வெள்ளியன்று வாக்குப் பதிவு நடை பெறுகிறது.

தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்ட மன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 

இதையொட்டி தமிழ்நாடு - புதுச்சேரி யில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக  அனல் பறக்க நடைபெற்று வந்த பிரச்சா ரம் ஏப்ரல் 17 மாலை 6 மணியுடன் முடி வடைந்தது.

இந்த இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள், வேட்  பாளர்கள், கட்சிகளின் தொண்டர்கள் காலை முதல் வீதி வீதியாக சென்று தீவிர  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.  ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை சென்னை  பெசன்ட் நகர் பகுதியில் நிறைவு செய் தார். சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். திமுக  இளைஞர் அணிச் செயலாளர் அமைச்ச ருமான உதயநிதி ஸ்டாலின், கோயம்  புத்தூர் தொகுதியில் தனது பிரச்சா ரத்தை நிறைவு செய்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் திண்டுக்கல் தொகுதியில் மாபெரும் பிரச்சார கூட்  டத்துடன் பரப்புரையை நிறைவு செய்  தார். காங்கிரஸ் தலைவர் கு. செல்வ பெருந்தகை திருவள்ளூரிலும், வைகோ திருச்சியிலும், தொல். திருமாவளவன் சிதம்பரத்திலும், அதிமுக பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தி லும் தங்களது பரப்புரையை நிறைவு செய்தனர்.

‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களியுங்கள்!
ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்

சென்னை, ஏப்.17- மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’  கூட்டணி கட்சிகளின்  வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ‘ஜெய்  பீம்’,‘வேட்டையன்’ பட இயக்குநர் த.செ.  ஞானவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ‘எக்ஸ்’  பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: “வாக்குரிமை என்பது என் உரிமை களைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை. வருங்  கால தலைமுறையினருக்கு வெறுப்பு நிலவாத, சக இந்தியர்களின் தனித்து வத்தை மதிக்கிற பாதுகாப்பான சூழலை  அமைத்து தருவது நமது தார்மீக கடமை. ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின்  வாக்குறுதிகள் சமூக நல்லிணக்கத்தை யும், சமூக நீதியையும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கையை அளிக்கின்றன.

மாநில உரிமை, மொழி உரிமை, கருத்து உரிமை, கல்வி உரிமை போன்ற  அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்ப தும், காத்துக் கொள்வதும் அவசியம்.  அதன் அடிப்படையில் திமுக, காங்கி ரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தை கள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்க ளிக்கும்படி நானறிந்த, என்னை அறிந்த  அனைவரிடமும் கேட்டுக்கொள்கி றேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, ‘அயலான்’ பட  இயக்குநர் ரவிக்குமாரும், திண்டுக்கல் மற்றும் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் ஆர்.  சச்சிதானந்தம், சு. வெங்கடேசன் ஆகி யோரின் படங்களைப் பதிவிட்டு ‘இந் தியா கூட்டணிக்கே எனது ஆதரவு’ என்று  தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந் தது குறிப்பிடத்தக்கது.

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கில்  இன்று விசாரணை

சென்னை, ஏப்.17- திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “தாம்பரம் ரயில் நிலை யத்தில் நான்கு கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறையிடம்  மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத்துறை எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், வாக்காளர்களுக்கு அளிப்ப தற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தும், இந்த  மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும். அவரை  தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்  துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த மனுவை அவசர வழக்காக விசா ரிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இம்மானுவேல் முறையிட்ட நிலையில், அதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, ஏப்ரல் 18 அன்று விசாரிப்பதாக தெரி வித்துள்ளது.

ஓட்டர் ஐடி இல்லாதவர்கள் வாக்களிக்க 12 ஆவணங்கள்
தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை, ஏப்.17- தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக நடை பெற உள்ளது. இந்நிலையில், தலைமை  தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, புத னன்று சென்னை தலைமைச் செயலகத் தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரூ. 1,297 கோடிக்கு  பணம், தங்கம் பறிமுதல்
“தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்த லையொட்டி நடைபெற்ற சோதனையில் இதுவரை ரூ. 1,297 கோடிக்கு பணம், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது.

அஞ்சல் வாக்குகளை செலுத்த இன்று கடைசி
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஏப்ரல் 18 மாலை 6 மணி வரை அஞ்சல்  வாக்குகளை செலுத்தலாம். பயிற்சி  மையங்களில் வாக்களிக்க முடியாத வர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் அலு வலகங்களுக்கு சென்று அஞ்சல் வாக்கு களை பதிவு செய்யலாம்.

அஞ்சல் வாக்குகள் அனைத்தும் திருச்சியில் ஒப்படைக்கப்பட உள்ளது. இதுவரைக்கும் 39 தொகுதிகளில் மொத்த மாக 8,400 அஞ்சல் வாக்குகள் பதிவாகி யுள்ளன. திருச்சி தொகுதியில் மட்டும்  3,369 அஞ்சல் வாக்குகள் பதிவாகி யுள்ளன.

வாக்களிக்க 12 ஆவணங்கள் 
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் மகாத்மா காந்தி தேசிய  ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி  அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்த கங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, வருமான வரி நிரந்த ரக் கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள்  தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலை மைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், ஒன்றிய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறு வனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய  பணி அடையாள அட்டைகள், மக்க ளவை, மாநிலங்களவை, சட்டமன்ற, சட்ட  மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்  படும் அடையாள அட்டை, இந்திய அர சின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இய லாமைக்கான தனித்துவமான அடை யாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங் களை காண்பித்து வாக்களிக்கலாம் என்  றும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

;