tamilnadu

சென்னையிலும் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது...

சென்னை:
சென்னையில் வெள்ளியன்று (ஜூலை 2) பெட்ரோல் லிட்டருக்கு 100.13 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுவதும், கொரோனாபரவலைத் தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாகமே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய்நிறுவனங்கள், தற்போது,  அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.சென்னையில் வியாழக்கிழமை பெட்ரோல், லிட்டர் 99.80 ரூபாய், டீசல் லிட்டர் 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியன்று  பெட் ரோல் 33 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 100 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

;