சென்னை, ஜூன் 6-சுகாதாரமற்ற சமையல்கூடம், சுத்தம் இல்லாத கழிப்பறைகள், காற்றோட்டம் இல்லாத அறைகள்என பல்வேறு குறைபாடுகளுடன் விடுதிகள் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அனுமதியின்றி இயங்கும் பெண்கள் விடுதிகளை கணக்கெடுக்க ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டார். உரிமம் பெறாத விடுதிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.இதையடுத்து 1050 விடுதி நிர்வாகிகள் அனுமதிகோரி விண்ணப்பித்தனர். இதில் 7 மகளிர் விடுதிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது. 5 விடுதிகள் மூடப்பட்டன. 127 விடுதிகளுக்கு கூடுதல்ஆவணங்கள் கோரப்பட்டுள்ளது. இதுதவிர 227 பெண்கள் விடுதிகள் அனுமதியின்றி சென்னைக்குள் இயங்கி வருவதும் கண்டு பிடிக்கப்பட்டது. மயிலாப்பூரில் 18 விடுதிகள், வேளச்சேரியில்-20, சோழிங்கநல்லூர்-79, அயனாவரம்-3, ஆலந்தூர்-16, பெரம்பூர்-5, மதுரவாயல்-17, கிண்டி-23, தண்டையார்பேட்டை-6, மாம்பலம்-15, அமிஞ்சிகரை-9, புரசைவாக்கம்-13, எழும்பூர்-3.இந்த விடுதிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன் தண்ணீர், மின் இணைப்புகளை துண்டித்து விடுதிகள் செயல்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.