tamilnadu

img

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு

சென்னை,டிச.30- புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டி செவ்வாயன்று (டிச.31) நள்ளிரவில் மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில்  பாது காப்பு ஏற்பாடுகளை சென்னை காவல்துறையினர் செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவல கத்தில் திங்களன்று (டிச.30) ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. மெரினாவில் செவ்வாயன்று இரவு 8 மணியில் இருந்து பொது மக்கள் கூடுவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு கூட்டம் அலை மோதும். சுமார் 1 லட்சம் பேர் திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடு படுவார்கள். புத்தாண்டு கொண்டாட் டத்தின்போது அசம்பாவிதங்களை தடுப்பதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகர் முழுவதும் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடை பெறுகிறது. இதற்காக சாலை பாதுகாப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் ரேசில் ஈடுபடு வார்கள். அவர்களை கட்டுப்படுத்துவ தற்கும், கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்காணிப்புக்குழுக் கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பைக் ரேசை தடுக்க 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தாண்டு தினத்தில் கடலில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட் டுள்ளது. இதற்காக கடற்கரை யோரம் சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை மீறி கடலுக்குள் செல்ப வர்களை தடுப்பதற்காக குதிரைப் படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இரவு 8 மணியில் இருந்து மெரினா கடற்கரைக்கு செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 8 மணிக்கு பிறகு கடற்கரை உட்புற சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் கலங்கரை விளக்கத்தின் அருகில் உள்ள வழியாக வெளியேற உத்தர விடப்பட்டுள்ளது. மெரினா காந்தி சிலையில் போர் நினைவுச் சின்னம் வரையில் நாளை இரவு 8 மணியில் இருந்து மறுநாள் காலை 4 மணி வரையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை மற்றும் வாலாஜா சாலை சந்திப்பில் இருந்து போர் நினைவுச் சின்னம் வழியாக வரும் வாகனங்கள் இரவு 8 மணிக்கு பிறகு கொடிமர சாலை வழியாக திருப்பி விடப்படும். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, லாயிட்ஸ் ரோடு, பெசன்ட் ரோடு, வாலாஜா ரோடு, பாரதி சாலை ஆகிய இடங்களில் இருந்து வரும் வாகனங்களும் மெரினா காமராஜ் சாலைக்கு செல்வதற்கு அனுமதி யில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாறில் இருந்து மெரினா நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி ரோடு- சாந்தோம் ரோடு சந்திப்பில் இருந்து திருப்பி விடப்படும்.எந்த வாகனங்களும் மெரினா காமராஜ் சாலை செல்வதற்கு அனுமதி இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எலியட்ஸ் கடற்கரை யில் 6-வது அவென்யூவில் செவ்வா யன்று இரவு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா - எலியட்ஸ் கடற்கரைக்கு புத்தாண்டை கொண்டாட வரு பவர்கள் வாகனங்களை நிறுத்த கடற்கரையொட்டி உள்ள 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

;