சென்னை,ஏப்ரல் 21- இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும், பிரதிக்ஷா அறக்கட்டளை பொறுப்பாள ருமான கிரிஸ் கோபாலகிருஷ்ணன், மருத் துவ ஆராய்ச்சி மற்றும் மூளை ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் ஆற்றிய பங்கை அங்கீ கரிக்கும் வகையில் சென்னையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
கோபாலபுரத்தில் உள்ள டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை இந்த விருதை வழங்கி கவுர வித்தது.
கிரிஸ் கோபாலகிருஷ்ணனுக்கு இந்த விருதைமெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி. மோகன், துணைத் தலைவர் டாக்டர் ரஞ்ஜித் உன்னி கிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா ஆகியோர் முன்னிலை யில் சங்கர நேத்ராலயா தலைவர் டாக்டர் டி.எஸ். சுரேந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சி யில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நீரிழிவு அருங்காட்சியகம் திறப்பு
இந்நிகழ்ச்சியில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் நீரிழிவு அருங்காட்சியகமான ‘மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை நீரிழிவு அருங்காட்சியகம்’ திறப்பு விழா நடை பெற்றது. இந்த அருங்காட்சியகம் சிறுசேரி யில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங் காட்சியகத்தை கிரிஸ் கோபாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
நீரிழிவு ஆராய்ச்சிக்கான உலக புகழ் பெற்ற மையமாக, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையில் உள்ள நீரிழிவு அருங்காட்சியகம், நீரிழிவு ஆராய்ச்சியின் பல ஆண்டு கால வரலாற்றைக் கவுரவிக்கும் மற்றும் விவரிக்கும் பிரத்யேக அருங்காட்சி யகமாக இருக்கும். அதன் ஆரம்பகால சிகிச்சை, கடந்து வந்த பாதை, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உலகெங்கிலும் உள்ள மூத்த விஞ்ஞானிகளின் பிற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவையும் இங்கு இடம் பெற்றுள்ளன என்று டாக்டர் ஆர்.எம். அஞ்சனா கூறினார்.