tamilnadu

நூறு நாள் வேலை கூலி பாக்கி கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு

விழுப்புரம், டிச. 9- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, காணை, கோலியனூர், வானூர், ஆகிய ஒன்றியங்களில் உலக லாம்பூண்டி, பொன்னங்குப் பம், வி.சாத்தனூர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட ஊராட்சி களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் நூறு நாள்  வேலை செய்த மாற்றுத்திற னாளிகளுக்கு 6 வாரம் முதல்  2 வாரம் வரை வேலைக்  கான கூலி இதுவரை சம்மந்தப்  பட்ட துறையினரால் வழங் கப்படவில்லை,  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்துத்வகை மாற்றுத்  திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ. கிருஷ்ணமூர்த்தி மாவட்ட  ஆட்சியர் அண்ணாதுரை யிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில், நூறு நாள்  வேலை செய்த மாற்றுத்திற னாளிகளுக்கு கூலி நிலுவை பாக்கி வைத்துள்ள ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடம் மாற்றுத்திறனாளிகள் கூலி நிலுவை பாக்கி வழங்க வேண்டும் என தனி நபர்க ளாக கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை கூலி  நிலுவை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை, அதனால் மாவட்ட ஆட்சி யர் உடனடியாக நடவ டிக்கை எடுத்து மாற்றுத்திற னாளிகளுக்கு கூலி நிலுவை பாக்கியை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

;