tamilnadu

img

ஓசூரில் தொழிலக-தொழில்நுட்ப கண்காட்சி துவக்கம்

ஓசூர், ஜூன் 29- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிறு குறுந்  தொழிற்சாலைகள் கூட்டமைப்பு ஹோஸ்டி யாவின் 5ஆவது “ஹோஸ்டெக் 2019” கண்காட்சி துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த தொழிலக, தொழில்நுட்ப கண்காட்சி துவக்க விழாவிற்கு மாவட்ட காவல் கண்கானிப்பாளர் பண்டி கங்காதர் தலைமை தாங்கினார். ஹோஸ்டியா தலை வர் வேல்முருகன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியாளர் பிரபாகர் கண்காட்சியை துவக்கி  வைத்து 140 அரங்குகளையும் பார்வை யிட்டார்.  தொழில்கள் வளர்ச்சிக்காக சூளகிரி பகுதி யில் இரண்டு சிப்காட்கள் துவங்க நிலம்  எடுக்கப்பட்டு வருகிறது. உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டையில் இரண்டு துணை மின் நிலையங்கள், 13 உயர்மட்ட நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. ஹோஸ்டியா கேட்டுக் கொண்டதன் பேரில் சிப்காட் முழுவதும் மின் விளக்குகள் அமைக்கப்பட இருக்கிறது. ஓசூரில் 12 ஏக்க ரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது என ஆட்சியர் கூறினார். விழாவில் ஹோஸ்டியா செயலாளர் வடி வேல், பொருளாளர் ஸ்ரீதரன், டேன்ஸ்டியா தலைவர் அன்புராஜன், இணைச் செயலா ளர் ஞானசேகரன், தொழில் வணிகத் துறை  பொது மேலாளர் பிரசன்னா, பாலமுருகன்,  சிட்கோ பொது மேலாளர் கண்ணன், டைடன்  நிறுவன முதன்மை மேலாளர் ராஜகோபா லன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில்  வணிகக் கண்காட்சி மலர் வெளியிடப் பட்டது. மூன்று நாட்களும் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், தொழில் முனைவோர்க ளுக்கான கருத்தரங்கம், பேராசிரியர் முனை வர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் “சந்தோ ஷத்தின் சாவி “ எனும் ஊக்கப் பயிற்சி என  பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தொழிலகங்கள், தொழில் முனை வோர்கள், தொழிலாளர்கள், சமூக ஆர்வ லர்களின், நீண்ட நாள் கோரிக்கைகளான தமி ழக அரசு சிப்காட் 1, பத்தளப்பள்ளி பகுதிகளில்  நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள் அமைக்க வேண்டும், ஓசூர் சிப்காட்டில் வணிக வளாகம், கலையரங்கம் கட்டித் தர வேண்டும், சிப்காட் முழுவதும் உள்ள தொழிலகங்களின் சாலைகளை தார்சாலையாக மாற்ற வேண்டும், இஎஸ்ஐ  மருத்துவமனையை தரம் உயர்த்தி நவீன மருத்துவ வசதிகள், போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும், வருங்கால வைப்பு நிதி பிரச்ச னைகளை எளிதாய் தீர்த்துக் கொள்ள வசதி யாக சேலத்தில் உள்ள அலுவலகக் கிளையை  ஓசூரில் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் உள்ளது குறிப் பிடத்தக்கது.