tamilnadu

img

கல்வி விவகாரத்தில் கவுரவம் பார்த்ததற்கு நீதிபதிகள் கண்டிப்பு 6 வயது சிறுமி தாக்கல் செய்த வழக்கில் உத்தரவு

சென்னை, ஜன. 11- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த வர் பாஸ்கரன்.  சமூக ஆர்வ லரான இவர் வழக்கறிஞ ராகவும் பணிபுரிந்து வரு கிறார். அப்பகுதியில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண் டாம் வகுப்பு படித்து வரும் இவரது மகளான அதிகை முத்தரசி என்ற 6 வயது சிறுமி தனது பள்ளியின் அவலநிலை  குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த செப்டம்பர். 30  அன்று  சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இதனை அப்போது விசா ரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அரசுத் தரப்பில் மாணவியின் புகார்  மீது எடுக்கப்பட்ட நடவ டிக்கை குறித்து நேரில் ஆஜ ராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தர விட்டதை அடுத்து கடந்த  அக்.16 அன்று மீஞ்சூர் மாவட்ட மற்றும் திருவள்ளூர்  மாவட்ட கல்வி அலுவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர். இது தொடர்பாக மறுப்பு மனு தாக்கல் செய்யும்படி மாணவி தரப்பிற்கு உத்தர விடப்பட்டது. இதனை அடுத்து நவ.21 அன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது பள்ளியின் தற்போ தைய நிலை குறித்து நேரில்  விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்  படி மாவட்ட நீதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஜன.10 அன்று  நீதிபதிகள் சத்தியநாராய ணன், ஹேமலதா ஆகியோர்  அடங்கிய அமர்வு முன்பு  இந்த வழக்கு விசார ணைக்கு வந்தபோது மாவட்ட நீதிபதி சரஸ்வதி பள்ளி தொடர்பான தனது அறிக்கையை தாக்கல் செய்தார்.  இதனையடுத்து மாணவி அதிகை முத்தரசியை நேரில் அழைத்து சுமார் 10 நிமிடம் பள்ளியின் தற்போ தைய நிலை குறித்து நீதிபதி கள் கேட்டறிந்தனர். பின்னர்  அரசுத் தரப்பு வழக்கறிஞரான முனுசாமியை நேரில் அழைத்து கண்டித்த நீதிபதி கள் மாணவர்களின் கல்வி விவகாரத்தில் அரசு கவுரவம் பார்க்கக் கூடாது என்றும் இதுவரை எடுக்கப்பட்ட நட வடிக்கைகள் குறித்து வருகின்ற 27 ஆம் தேதி  விரிவான அறிக்கையினை அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தர விட்டனர் இதேபோன்று மாவட்ட நீதிபதியின் விசா ரணை அறிக்கை தொடர்பாக தங்களது கருத்தை மனு வாக அன்றைய தினமே மாணவி தரப்பிலும் தாக்கல்  செய்யலாம் எனவும் உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

;