ஜனவரி 22 ஆம் தேதி ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கொரோனா பெருந்தொற்று காரணத்தால் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் இரத்து செய்யப்பட்டு 31.01.2022 வரை மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்கள் இன்றி பள்ளிகள் செயல்படுவதால் 22.01.2022 அன்று சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.