tamilnadu

img

சாவர்க்கருக்கு ஆதரவாக வரலாறு திரிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்கு நராக இருக்கும் சுதா கொங்கரா இறுதிச் சுற்று, சூரரைப்போற்று போன்ற ஹிட் படங்க ளை இயக்கியவர் ஆவார். இவர் சமீபத் தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,“சாவர்க் கர் ஒரு மதிப்பிற்குரிய தலைவராக இருந்துள் ளார். திருமணத்துக்குப் பின்னர் அவர் தனது மனைவியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார். சாவர்க்கரின் மனைவி படிப்பதற்காக சென்றபோது அவரை அந்தத் தெருவில் இருந்த வர்கள் கேலி செய்துள்ளனர். சாவர்க்கர், பொறுமை இழக்காமல், தனது மனை வியைப் பள்ளிக்குச் சென்று கல்வி பெற ஊக்குவிக்க முயற்சித்தார் எனக் கூறினார்.

சுதா கொங்கராவின் இந்த பேச்சு  சமூக வலைதளங்களில் டாப் டிரெண்டிங் கில் வைரலாகியது. அனைத்து தரப்பின ரும் சுதா கொங்கராவிற்கு கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், அவர் அளித்த தகவலின் உண்மைத் தன்மை ஆராய்ந்து, ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரி பாய் பூலேவின் வரலாற்றை “சாவர்க்கரின் வரலாறு” என திரித்துப் பேசியுள்ளார் என போட்டுடைத்தனர். “ஜோதிபா பூலேதான், தனது மனைவி சாவித்திரிபாயை படிக்க வைத்தார். அப்போது அவர்கள் இருவரும் அந்தப் பிற்போக்கு சமூகத்தால் ஒடுக்கப்பட்ட னர். அந்த ஒடுக்குமுறையை மீறி, இந்தி யாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்ரிபாய் உருவெடுத்தார். இதுதான் வரலாறு” என விமர்சித்து கருத்துக ளைப் பதிவிட்டனர்.

விமர்சனங்கள் பலமாக எழுந்ததால் சுதா கொங்கரா,“என் தவறுக்கு வருந்து கிறேன்.  எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் பூலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்” என மன்னிப்புக் கோரி னார்.

கங்கனா லிஸ்டில் சுதா கொங்கரா

இந்திய திரையிலகில் முன்னணி நடிகையாக உள்ள கங்கனா ரணாவத் பல்வேறு ஹிட் படங்களில் நடித்த பெரு மைக்குரியவர். பாஜக மற்றும் இந்துத்து வா ஆதரவு கருத்துக்களால் கங்க னாவை இந்திய ரசிகர்கள் புறக்கணிக்க ஆரம்பித்தனர். கடைசியாக நடித்த 4 படங்கள் நல்ல கதையாக இருந்தாலும் ரசிகர்கள் வரவேற்பு அளிக்காததால், 4  படங்களும் மண்ணை கவ்வியது. இதனால் சோர்ந்து போன கங்கனா மோடியிடம் பேசி 18ஆவது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யானார்.

இந்நிலையில், தீவிர இந்துத்துவா ஆதரவாளரான சாவர்க்கருக்கு ஆதர வாக வரலாறு திரித்து பேசிய சுதா கொங்கராவையும் கங்கனா லிஸ்டில் வைத்து தமிழ் திரையுலக ரசிகர்கள் தங்க ளது விமர்சனங்களால் புரட்டியெடுத்து வருகின்றனர்.