tamilnadu

img

டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்க.. அமைச்சரிடம் சிஐடியு வலியுறுத்தல்....

சென்னை:
டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் உழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை, புதனன்று (ஜூன் 30) தலைமை செயலகத்தில் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே. திருச்செல்வன், துணை பொதுச்செயலாளர் கே.பி. ராமு ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்.

27 கோரிக்கைகள் அடங் கிய அந்த மனுவின் சாரம்சம் வருமாறு:

டாஸ்மாக் கடைகளில் 18 வருடமாக தொடர்ந்து பணியாற்றும் ஊழியர்களின் பணியை வரன்முறைப்படுத்தி, பணிநிரந்தரம் செய்து அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும். அனைத்து கடை ஊழியர்களுக்கும் பணி ஆவணம், அடையாள அட்டை, சீருடை வழங்க வேண்டும்.  பொதுமக்களுக்கு இடையூறாக, பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்.மதுபான கடைகளின் எண்ணிக்கையை இறுதி செய்து, பணிமூப்பு மற்றும் விற்பனை அடிப்படையில் தேவைப்படும் ஊழியர்கள், உபரி ஊழியர்கள் என வகைப்படுத்த வேண்டும். கடை பணிக்கு தேவையான ஊழியர்களை பணிவரன்முறை செய்து, அடிப்படை சம்பளத்துடன் பஞ்சபடி சேர்த்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.உபரி ஊழியர்களை கல்வி தகுதி அடிப்படையில் அரசு துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களில் பணித்தொடர்ச்சியுடன் மாற்று பணி வழங்கிட வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களில் கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

கடைப்பணிக்கான கல்வித்தகுதி இருந்தும் உரிய காப்புத் தொகை செலுத்த இயலாத கீழ்நிலை பணியில் உள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். கடைகளில், விற் பனைக்கேற்ப ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானித்து பணிநிரவல் செய்ய, சுழற்சி முறை பணியிடமாறுதலை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;