tamilnadu

img

ஏழை மாணவிக்கு உதவி கரம் நீட்டிய எத்திராஜ் கல்லூரி நிர்வாகம்

சென்னை, மே 13- பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 578 மதிப்பெண் பெற்ற சென்னை மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் முழு உதவித் தொகையுடன் படிப்பதற்கான ஆணையை கல்லூரி நிர்வாகம் வழங்கியது.

பெரம்பூரில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற ஆட்டோ ஓட்டுனரின் மகள் பூங்கோதை என்ற மாணவி சென்னை மாநகராட்சி அளவில் 578 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார். இதை அறிந்த எழும்பூரில் உள்ள எத்திராஜ் தனியார் கல்லூரி அந்த மாணவியை நேரில் அழைத்து முழு உதவித் தொகையும் வழங்கி, பி காம் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்க்கை காண ஆணையையும் கல்லூரி சேர்மன் மைக் முரளிதரன் வழங்கினார்.

பின்னர் பேசிய மாணவி பூங்கோதை, தனது தந்தை ஆட்டோ ஓட்டுநர் என்று மிகுந்த சிரமத்துடன் தன்னை படிக்க வந்ததாகவும் தெரிவித்தார். அதேபோல் நான் சென்னை மாநகராட்சி அரசு பள்ளியில் பயின்று சாதனை படைத்ததால், மிகவும் பெருமைப்படுவதாகவும், கல்லூரி படிப்பை தொடர்வதற்கு தமிழ்நாடு அரசு புதுமைப் பெண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக, அரசு பள்ளி மாணவ மாணவிகள் அதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.