tamilnadu

img

தொழிலாளர் விவசாயிகள் ஒற்றுமையை வலுப்படுத்துவது ஒரு அரசியல் கடமை சிஐடியு மாநாட்டில் ஹன்னன் முல்லா வாழ்த்துரை

சென்னை, ஜன.26- முற்போக்கான திசையில் சமுதாயம் முன்னேற வேண்டுமானால் தொழிலாளர் – விவசாயிகள் ஒன்றுபட்ட இயக்கங்கள் வலுப்பெற்றாக வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலா ளர் ஹன்னன் முல்லா கூறினார். சிஐடியு 16வது அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகளை சனிக்கிழமையன்று (ஜன.25) வாழ்த்திப் பேசிய ஹன்னன் முல்லா, “நான் இங்கே வந்து வாழ்த்திப் பேசுவது சம்பிர தாயத்துக்காக அல்ல. தொழிலாளர் – விவசாயி களின் கூட்டு இயக்கத்தின் முக்கியத்துவத்தை, இங்கே அதற்கொரு நீண்ட வரலாறு இருப்ப தையும் உணர்ந்திருப்பதால்தான்” என்றார். விவசாயக் களத்தில் நிலம் பாதுகாப்பு, கட்டுப்படியாகும் விலை, இடுபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு போன்ற கோரிக்கை களுக்காகப் போராடிக்கொண்டிருக்கிற விவ சாயிகள் சங்கம், மக்களின் ஜனநாயக உரிமை களுக்கான போராட்டங்களிலும் முன் வரிசை யில் நிற்கிறது. தொழிலாளர்களிடையே சிஐ டியு தனிப்போராட்டங்களோடு கூட்டு இயக் கங்களையும் கட்டி வருவது போல, விவசாயி களிடையே கிசான் சபா தனி இயக்கங்களை யும், கூட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள் கிறது என்றும் அவர் கூறினார். விவசாயிகளைக் கைவிடும் மோடி அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து நடத்திய பேரணியில் சுமார் 250 விவசாயிகள் அமைப்பு கள் பங்கேற்றன. அதன் பலனாக அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு உரு வாகியிருக்கிறது என்று தெரிவித்த அவர், “முதல் முறையாக நாடு தழுவிய விவசாய வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப் பட்டிருக்கிறது. கொல்கத்தா உயர்நீதிமன்றத் தில் வேலைநிறுத்தத்திற்குத் தடைவிதிக்கக் கோரி வழக்குப் தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்கில் மட்டுமல்ல, வேலைநிறுத்தப் போரா ட்டத்திலும் வெற்றி பெறுவது உறுதி,” என் றார். 50க்கும் மேற்பட்ட பழங்குடியினர் அமைப்புகள் விவசாயிகள் சங்க இயக்கங்க ளில் இணைந்து செயல்படுவதையும், விவ சாயத் தொழிலாளர் இயக்கத்தின் முக்கியத்து வம் பற்றியும் குறிப்பிட்ட அவர், அவர் களோடு விவசாயிகள் சங்கம் தனது ஒரு மைப்பாட்டை வெளிப்படுத்துகிறது, அந்த ஒருமைப்பாடு ஜனவரி 19ல் வெளிப்பட்டது என்றார். வர்க்கப் போராட்டங்களை நோக்கி இந்த ஒருமைப்பாடு இட்டுச் செல்லும் என்றும் குறிப்பிட்டார். புரட்சிகர மாற்றங்களுக்கு இட்டுச் செல்லும் இந்த வர்க்க ஒற்றுமையைக் கட்டு கிற அரசியல் பணியைத் தொழிற்சங்கத் தலை வர்கள் ஒரு வரலாற்றுக் கடமையாகத் தங்கள் வட்டாரங்களில் மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்தார். இந்தப் பயணத்தில், மத்தியில் உள்ள மத வாத, சாதியவாத சக்தியின் ஆட்சியை அகற்று கிற கடமையும் இணைகிறது. அதை நிறை வேற்றுவதற்காகவும் தொழிலாளர் –விவ சாயிகள் - விவசாயத் தொழிலாளர் ஒற்றுமை வலுவாகக் கட்டப்பட வேண்டும். குடி யுரிமை பாதுகாப்பு உள்ளிட்ட தேசத்தின் போராட்டங்களுக்கு ஒரு வலுவான பாறைத் தளமாக தொழிலாளர் – விவசாயிகள் ஒற்றுமை திகழ முடியும் என்றும் ஹன்னன் முல்லா நம்பிக்கை தெரிவித்தார்.
மரியம் தாவ்லே வாழ்த்துரை
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே, தமது வாழ்த்துரையில், ஜனவரி 8ல் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டியக்கம் விடுத்த அறைகூவலை ஏற்று வெற்றிகரமாக நடை பெற்ற நாடுதழுவிய வேலைநிறுத்தம் தொழி லாளர்களுக்கு மட்டுமல்லாமல், மாற்றங் களுக்காகப் போராடும் பெண்களுக்கும் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள பிரேசில் ஜனாதிபதி பொல்சானரோ அழைக்கப்பட்டிருக்கிறார். பெண்களின் சுயமரியாதையைத் தொடர்ந்து இழிவு படுத்திப் பேசிவருகிறவரான அவர், இந்திய விவசாயிகளுக்குப் பாதகமான நிலைப் பாட்டை எடுத்தவர். பிரதமர்மோடி சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பது இந்தியப் பெண்களுக்கும் உழைப்பாளிகளுக்கும் ஒரு பெரும் அவமதிப்பேயாகும் என்றார். நாட்டில் முன்னெப்போதையும் விட மிக அதிகமாக வேலையின்மைப் பிரச்சினை உரு வெடுத்துள்ளது. பெண்களுக்கும் குழந்தை களுக்கும் எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. மநுவாத அரசியல் இத்தகைய பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவது மட்டுமல்ல, இந்தப் பிரச்சனைகளை மேலும் தீவிரப்படுத்துவதுமாகும். உழைப்பாளிகள், பெண்கள் மீதான வன்முறைகளைப் பெரு மைப்படுத்துவது மநுவாதம். இதனை வலு வாக எதிர்த்து முறியடிப்பது, சமுதாயத்தின் முற்போக்கான வளர்ச்சிக்கே ஒரு முக்கியத் தேவையாகிறது என்றும் மரியம் பேசினார்.
எஸ்.எப்.ஐ தலைவர் வி.பி.ஷானு
இந்திய மாணவர் சங்க அகில இந்தியத் தலைவர் வி.பி.ஷானு தனது வாழ்த்துரையில் பேசியதாவது: சிஐடியு, இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) இரண்டும் ஒரே ஆண்டில் - அதா வது 1970ல் தொடங்கப்பட்ட அமைப்பாகும். அந்த ஆண்டில் உலகம் முழுவதும் எண்ணற்ற போராட்டங்கள் நடைபெற்றன. போராட்ட கால மாக அந்த ஆண்டு இருந்தது. வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த போரைக் கண்டித்து அமெரிக்காவில் ஸ்டேன் பல்கலைக் கழ கத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதேபோல் ஐரோப்பாவில் அன்று இருந்த அரசுகளின் தவறான கொள்கைகளை எதிர்த்து மாணவர்களும் தொழிலாளர்களும் போரா ட்டம் நடத்தினர். அந்த நேரம் போராட்டம் நடத்திய மாணவர்களின் ஒரு விஷயத்தில் கருத்து முரண்பாடு நிலவியது. ஏகாதிபத்தி யத்திற்கு எதிரான போராட்டம் எண்பது மாண வர்கள் மட்டுமே பங்கேற்கக் கூடிய இயக்க மாக இருக்கவேண்டும், தொழிலாளர்கள், விவ சாயிகள் எவரையும் இந்த இயக்கத்தில் சேர்க்கக்கூடாது என்று ஒரு தரப்பினரும் மற்றொரு தரப்பினர் மாணவர்கள் மட்டுமே போராடினால் அரசியல் ரீதியாக வெற்றிபெற முடியாது என்றும் கூறினர்.
சுந்தரய்யாவின் அறிவுரை
1974ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இந்திய மாணவர் சங்கத்தின் இரண்டாவது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அதை தெலுங்கானா போராட்டத் தளபதி பி.சுந்த ரய்யா தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களைப் பாதிக்கும் கல்விக்கட்டண உயர்வு, மாணவர் இடங்கள் குறைப்பு உள்ளிட்ட போன்ற கல்வி தொடர்பான பிரச்சனைகளில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. தங்களது பெற்றோர் ஒரு விவசாயியாகவோ அல்லது தொழிலாளி யாகவே இருக்கும்போது ஆளும் அரசின் தவ றான பொருளாதார கொள்கையால் அவர்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்காகவும் அரசை எதிர்த்து குரல் கொடுக்கவேண்டியது மாணவர்களின் கடமை என்று சுட்டிக்காட்டி னார். விவசாயிகளும் மாணவர்களும் தொழி லாளர்களும் இணைந்து போராட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எனேவே தான் கடந்த 8ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு மாணவர் சங்க மும் ஆதரவு தெரிவித்தது. பல இடங்களில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து மத்திய மாநில அரசுகளின் தவறான பொருளா தார கொள்கைகளைக் கண்டித்த இயக்கங்க ளில் கலந்து கொண்டனர். 1971 ஆம் ஆண்டு இருந்ததை போன்ற போராட்டக் காலம் தற்போது நிலவுகிறது. எனவே தான் குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடி யுரிமை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்த போராட்டங்களில் இந்திய மாணவர் சங்கம் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டை வாழ்த்தி அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலா ளர் பி.வெங்கட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொதுச் செயலாளர் அவாய் முகர்ஜி ஆகி யோரும் உரையாற்றினர்.

;