tamilnadu

img

ஜி.எஸ்.டி. பிடித்தம் செய்யாதே நகை மதிப்பீட்டாளர்கள் கோரிக்கை

சென்னை, ஜூன் 10- நகை மதிப்பீட்டாளர்களை பணி நிரந்தரம் செய்து அனை வருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்  வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கூட்டுறவு நகை மதிப்பீட்டா ளர்கள் மாநில ஒருங்கிணைப்புக் குழு (சிஐடியு) சார்பில் சென்னை  பெரியார் சாலையில் என்.வி.நட ராஜன் மாளிகையில் உள்ள கூட்டு றவு சங்கங்களின் பதிவாளரிடம்  மனு கொடுக்கும் போராட்டம்  மாநிலத் தலைவர் ஏ.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடை பெற்றது. நகை மதிப்பீட்டாளர் மாநில  ஒருங்கிணைப்புக்குழு அமைப்பா ளர் எஸ்.பெருமாள், துணை அமைப்பாளர் டி.மகாராஜன், விவேகானந்தன், பானுமூர்த்தி (கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மே ளனம்) உள்ளிட்ட மாநிலம் முழு வதிலும் இருந்து ஏராளமான நிர் வாகிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- தமிழ்நாடு முழுவதும் மாநில  கூட்டுறவு வங்கி, மத்தியக் கூட்டு றவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி,  தொடக்க வேளாண்மை கூட்டுறவு  கடன் சங்கங்கள், நிலவளவங்கி கள், சிக்கன நாணய சங்கங்கள் ஆகியவற்றின் பிரதான பணியே நகைக் கடன் வழங்குவதுதான். 10 முதல் 20 ஆண்டுகளாக பணி நிரந்தரமின்றி பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர்கள் சுமார்  18,000 பேர் நகைக் கடன் வழங்கும்  பணியுடன் அலுவலக பணிகளை யும் செய்து வருகிறார்கள். இவர் கள் வாழ்க்கைக்கு தேவையான குறைந்தபட்ச ஊதியமோ, ஊழி யர் வருங்கால வைப்பு நிதி,  மருத்துவ வசதி (இ.எஸ்.ஐ)  போன்ற சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இல்லை. அந்த ஊழி யர்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் ஜி.எஸ்.டி,  பிடிலிட்டி கியாரண்டி போன்ற  கட்டணங்களும், வருமானவரி யும் பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நகை வைக்கப்படும் பெட்டக்கத்தின் சாவி கூட்டுறவு சங்கங்களின் தலைவரிடம் உள்ளது. அப்படி இருக்கும் போது நகை மதிப்பீட்டாளர்கள் எப்படி நகைகளை மாற்றி போலி நகைகளை வைக்க முடி யும். நகைகளை திருட முடியும். எனவே ஊழியர்கள் மீது குற்றம்  சுமத்துவதை கைவிட வேண்டும்.  காலிப்பணியிடங்களில் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து நிரந்தரப் பணி வழங்க வேண்டும். நகை பரிசீலனைக் கட்டணம் பாக்கெட் ஒன்றுக்கு 50 ரூபாய் அல்லது நாள் ஒன்றுக்கு ரூ. 1,500 வழங்க வேண்டும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி மருத்துவ வசதி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும். துறை ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் நகை  மதிப்பீட்டாளர்கள் அனை வருக்கும் பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும். ஊழியர்கள்  மீது எடுக்கப்படும் பாரபட்சமான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி பதிவாளரிடம் மனு கொடுத்துள்ளோம். மனுவை பெற்றுக் கொண்ட பதிவாளர் அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். எங்கள் கோரிக்கை நிறைவேற வில்லை என்றால் மாநிலம் தழு விய அளவில் அடுத்தகட்டப்  போராட்டத்தை முன்னெடுப் போம். இவ்வாறு அவர் கூறினார்.