tamilnadu

பக்ரீத், தொடர் விடுமுறை : 1,300 சிறப்பு பேருந்து இயக்க அரசு முடிவு!

சென்னை, ஜூன் 13 - “ஜூன் 15, 16 விடுமுறை மற்றும் 17 (திங்கட் கிழமை) பக்ரீத் பண்டிகை என தொடர் விடு முறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

 இதனைக் கருத்தில் கொண்டு தினசரி  இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக  சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதன்படி சென்னை கிளாம்பாக்கத்தி லிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்ப கோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 545 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை 585 சிறப்பு பேருந்துகளும், ஞாயிற்றுக்கிழமை 140 சிறப்பு பேருந்துகளும் இயக்கிட திட்டமிடப் பட்டுள்ளது.  

மேலும், திங்கட்கிழமை அன்று பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு 705 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.