tamilnadu

img

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்க வேலூர் மண்டல 9-வது மாநாடு

வேலூர், மே 12-அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தின் வேலூர் மண்டல 9- வது மாநாடுவேலூரில் தோழர் திருநாவுக்கரசு நினைவரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத் தலைவர் என்.காசிநாதன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் மோகன் சங்க கொடியை ஏற்றி வைத்தார். இளங்கோ அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். இணைச் செயலாளர் சஞ்சீவி வரவேற்றார்.சம்மேளன துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் அறிக்கையை எஸ்.பரசுராமன், பொருளாளர் கே.ரவிச்சந்திரன் அறிக்கைகளை சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், காஞ்சிபுரம்- திருவண்ணாமலை மண்டல பொதுச் செயலாளர்கள் என்.நந்தகோபால், ஏ.சேகர் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்தும் புதிய நிர்வாகிகளை அறிமுகம்செய்து சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் உரையாற்றினார்.வரவுக்கும் செலவுக்கும் இடையே உள்ள வித்தியாச தொகைக்கு கூடுதலாக ரூ.5000கோடி பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். ஓய்வூதிய தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும், பொதுப் போக்கு வரத்தை பலப்படுத்த நகரப்பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும்.செப்டம்பரில் துவங்க உள்ள ஊதிய ஒப்பந்தத்தை தாமதமின்றி உரிய காலத்தில் அமல்படுத்த வேண்டும், நடத்துநர் இல்லா பேருந்துகள் இயக்குவதை கைவிட வேண்டும். தொலைதூர பேருந்துகளில் நடத்துநருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும், பயன்பாட்டில் உள்ள கண்டமான பழையபேருந்துகளை திரும்ப பெற்று புதிய பேருந்துகளை இயக்கிட வேண்டும். நிலுவையிள்ள அகவிலைப்படியினை விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;