tamilnadu

img

புதிதாக நகரும் ரேஷன் கடைகள் திறக்க அரசு அனுமதி

சென்னை:
சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 3,501 நகரும் அம்மா நியாய விலைக் கடைகளை திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே இன்றியமையாப் பொருட்களை வழங்குவதற்காக மூவாயிரத்து 501 நகரும் நியாயவிலைக் கடைகள் 9 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பில் தொடங்கிச் செயல்படுத்தப்படும் எனச் சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.அதன்படி நகரும் நியாயவிலைக் கடைகளைத் தொடங்கிச் செயல்படுத்தக் கூட்டுறவுச் சங்கப் பதிவாளருக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.நகரும் நியாய விலைக் கடைகள் திறப்பதன் மூலம் சுமார் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் நடமாடும் நியாய விலை கடைகள் திறக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் நியாய விலைக் கடைகள் செயல்படும் இடம்,நேரம், நாட்களுக்கு ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் என  அரசு தெரிவித்துள்ளது.நகரும் நியாயவிலைக் கடைகளைத் தொடங்க மாவட்ட ஆட்சியருடன் இணைந்து செயல்படவும் சிறப்புக் கவனம் செலுத்தவும் சென்னை மண்டலக் கூடுதல் பதிவாளரையும், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களையும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

;