tamilnadu

img

செவிலியர்களுக்கான முதல் தேசிய மாநாடு

சென்னை, ஜன.29– சென்னையில் தேசிய கல்லீரல் தொடர்பான செவிலியர் மாநாடு 2020 நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து  350 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதற்கு பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை ஏற்பாடு செய்தி ருந்தது.  அடிப்படை மற்றும் மேம்பட்ட கல்லீரல் தீவிர சிகிச்சை– செவிலியர்களுக்கான புதிய வாய்ப்புகள் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்த மாநாடு நடை பெற்றது. இந்திய செவிலியர் கவுன்சிலின் தலைவர் டாக்டர் திலீப் குமார் மாநாட்டை துவக்கி வைத்தார். இந்திய மருத்துவ சேவை வழங்குவோர் அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டாக்டர் கிரிதர் கியானி சிறப்புரை ஆற்றினார். இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ மனையை சேர்ந்த நிபுணர்களால், அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட கல்லீரல் தீவிர சிகிச்சை தொடர்பாகவும், கல்லீரல் பாதிப்புக்குள்ளானவர்கள், கல்லீரல் மாற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களை எந்த முறையில் பராமரிப்பது, சிகிச்சை அளிப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. கல்லீரல் தீவிர சிகிச்சை பிரிவில் தரத்தை உறுதி செய்தல், அதன் செயல்பாட்டை புரிந்து கொள்ளு தல் ஆகியவை குறித்து செவிலியர்களுக்கு வலியுறுத்தப் பட்டது. 

;