சென்னை, ஆக. 21- “ரஷ்யப் பல்கலைக்கழங்களில் நடப்புக் (2020-ஆவது) கல்வியாண்டில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கு சேர விருக்கும் இந்திய மருத்துவ மாணவர்க ளுக்கு, ‘இணைய வழியில்’ பாடங்களைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் வகுப்புகள் வரும் செப்டம்பர், அக்டோபரில் தொடங்கி, நடப்புக் கல்வியாண்டு முழுவதும் நடை பெறும். கோவிட் 19 பெருந்தொற்று காரண மாக, சர்வதேச விமானப் பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் ரஷ்யப் பல்கலைக் கழகங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன” என்று தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் திரு. அலியக் என். அவ்தீவ் கூறினார். சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மற்றும் அறிவியல் மையம் ஏற்பாடு செய்தி ருந்த இணையம் வழியான செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை அவர் தெரிவித்தார். “ரஷ்யப் பல்கலைக்கழங்களின் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இந்திய அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படி +2 பாடங்க ளில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். சமூக நிலையில் மிக வும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாண வர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற பழங்குடி யினப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எனில்…
குறைந்தது 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். +2வை தமிழ் மீடி யத்தில் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அதே சமயம், சி.இ.டி, ஐ.இ.எல்.டி.எஸ். போன்ற நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. இவ்வாறு அவர் கூறினார். ரஷ்யாவின் எந்தப் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் மருத்துவக் கல்வி பயில்கி றார் என்பதைப் பொறுத்து, இதற்கான கட்ட ணங்கள் மாறுபடும். தோராயமாக ரஷ்ய மொழி பாடத்திட்டத்தில் பயில ஆண்டுக்கு சுமார் 2500 முதல் 4000 அமெரிக்க டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். மாறாக, இதே பட்டப்படிப்பை ஆங்கில மொழியில் கற்பதானால், ஆண்டுக்கு 3500 முதல் 6000 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டி வரும் என்று ரஷ்ய கலாச்சார மற்றும் அறிவியல் மையத்தின் இயக்குநர் கென்னடி ஏ. ரோகெலியவ் கூறினார். பேட்டியின் போது ரஷ்யப் பல்கலைக் கழகங்களின் இந்தியப் பிரதிநிதியாக செய லாற்றி வரும் ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ரவிச்சந்திரன் உடனிருந்தார். மேலும் தகவல் பெறவும், முன்பதிவை தொடங்கவும் www.studyabroadedu.com என்ற இணைய தளத்தையோ, 92822 21221 என்ற தொலைப்பேசி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.