tamilnadu

நெடுஞ்சாலைக்காக வெட்டப்படும் 20 ஆயிரம் மரங்கள்

சென்னை, ஜூன் 8- சென்னை - கர்நூல் நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக சுமார் 20 ஆயிரம்  மரங்கள் வெட்டப்படவுள்ளன. சென்னையை அடுத்த தட்சூர் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் இடையே 126.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது. மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள ‘வரைவு சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை’யின் படி, இந்த நெடுஞ்சாலை யானது திருவள்ளூர் மாவட்டம் புளி கொன்றம் வனப் பகுதியில் 700 மீட்டர் தடத் தின் வழியாகச் செல்கிறது.  இந்த நெடுஞ்சாலை திட்டத்துக்காக மொத்தம் 884.26 ஹெக்டேர் நிலம் கைய கப்படுத்தப்படுகிறது. இதில் 12 சதவிகிதம் வனப் பகுதியாகவும், 5 சதவிகிதம் நீர் நிலைப் பகுதியாகவும், 76 சதவிகிதம் வேளாண் நிலங்களாகவும் இருக்கின்றன. சென்னை - சேலம் நெடுஞ்சாலைத் திட்டத் தால் மக்களின் இருப்பிடம், வேளாண் நிலங் கள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தைப் போலவே, இந்த சென்னை - கர்நூல் நெடுஞ்சாலைத் திட்டத்தால் திருவள்ளூர் மாவட்ட கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். இத்திட்டத்தை எதிர்த்து திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் தொழிலா ளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த 26 கிராம மக்கள்  ஒருங்கிணைந்து போராட் டத்தில் ஈடுபடவுள்ளனர்.  மாவட்ட ஆட்சியரிடமும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகளி டமும், முதலமைச்சரிடமும், பல்வேறு அரசி யல் தலைவர்களிடமும் மனு அளித்து முறை யிட்டுள்ளோம். நிலம் கையகப்படுத்துவ தற்கான நோட்டீசுகள் எட்டு மாதங்களுக்கு முன்பே வழங்கப்பட்டன. இந்த நெடுஞ் சாலைத் திட்டத்தால் இங்கு விவசாயம் பெரி தும் பாதிக்கப்பட்டுள்ளது என்று விவசாயி கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.