tamilnadu

img

முன்களப் பணியாளர்களுக்கு முழுக் கவச உடை வழங்க வேண்டும்....

சென்னை:
கொரானா தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு முழுக் கவச உடை வழங்கவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கேட்டுக்கொண்டுள் ளார்.

இதுகுறித்து அவர் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:கொரானா நோய் தொற்று பரவல் மீண்டும் தீவிரமாகி வருகிறது. சென்னை பெருநகரம், இதன் அண்டை மாவட்டங்கள் மற்றும் மதுரை மாவட்டம் போன்ற பகுதிகளில் மக்கள் வாழ்க்கை நடத்தவே பயந்து வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இந்தக் கொடிய நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் முன்களப் பணியாளர்களாக செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப் படுவது அதிகரித்து வருகின்றது.

பொது முடக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரானா நோய் பெருந்தொற்று தாக்குதலால் பாதிக்கப்பட்டிருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.அனைத்துத் தரப்பினரும் மதுக்கடைகளை திறக்க வேண் டாம் என மன்றாடிக் கேட்டும் அரசு காது கொடுத்து கேட்கவில்லை. தற்போது மதுக்கடைகளில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்கள் கொரானா நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

தவிர்க்க முடியாத சேவைகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், டாஸ்மாக் பணியாளர்கள் என அனைவருக்கும் முழுமையான நோய் தடுப்பு உடைகள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் வழங்குவதில் அரசு அலட்சியம் காட்டி வருவதால்  பணி புரிவோர் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.இனியும் தாமதிக்காமல் முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் கொரானா நோய் தொற்று தடுப்பு உடைகள் உள் ளிட்ட பாதுகாப்பு சாதனங்களை வழங்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;