tamilnadu

img

கடந்த ஆண்டை விட உணவு விலை 8 சதவீதம் உயர்வு

வீட்டில் சமைக்கும் சைவ உணவின் விலை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகை யில் இந்த ஆண்டு 8 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், அசைவ உணவிற்கான செலவு கடந்த நான்கு மாதங்களில் இல்லாத வகையில் 3 சத வீதம் அதிகரித்துள்ளது என  கிரிசில் நிறுவனம் தெரி வித்துள்ளது.

கடந்த மாதம் வெங்காயம் 14 சதவீதம், தக்காளி 40 சதவீதம் மற்றும் உருளைக்கிழங்கு 38 சதவீதம் என விலை அதிகரித்துள்ளது.

அதே போல, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது அரிசி அதே 14 சதவீதத்திலும்  பருப்பு வகைகள் 20 இல் இருந்து 22 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

வெங்காயத்தைப் போலவே அரிசி மற்றும் பருப்பு வகைகளின் வரத்தும் மிக குறைவாக இருந்தது  என சந்தை பகுப்பாய்வு நிறுவனமான கிரிசில்  ‘ரொட்டி அரிசி விலை’ என்ற அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஒரு முழு உணவின் விலை 7 சதவீதமாக உயர்ந்திருந்தா லும் இந்தியாவின் சில்லறை உணவுப் பணவீக்கம் 8.7 மற்றும் 8.5 சதவீதம் என அதிகமாகவே உள்ளது.

ராபி பருவ சாகுபடி வீழ்ச்சியை சந்தித்ததால் வெங்காயம் வரத்து வீழ்ச்சியடைந்திருந்தது.அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் உருளைக்கிழங்கு பயிர்கள் சேதத்தை சந்தித்தால் உருளைக்கிழங்கு மற்றும் அது சார்ந்த உணவுகளின் விலை உயர காரணமாக இருந்தது.

வெங்காயம், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு விலை உயர்ந்த அதே நேரத்தில் சீரகம், மிளகாய் மற்றும் தாவர எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 சதவீதம், 31 சதவீதம் மற்றும் 10 சதவீதம் என குறைந்தது. இதன் காரணமாக  சைவ உணவின் விலை அதீதமாக அதிகரிக்காமல் இருந்தது. மேலும் அசைவ உணவு விலை  ₹54.9 ஆக  3 சதவீதம்  உயர்ந்துள்ளது.

;