வாலாஜாபாத் பாலாற்றில் வெள்ளம் ; போக்குவரத்து தடை
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் உள்ள பாலாறு தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல கிராமங்களில் வசிக்கும் மக்கள் நேரடியாக செல்ல முடியாமல், பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் பல ஆண்டுகளாக தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
