tamilnadu

img

திருப்பத்தூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை கண்டித்தும் அதனை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் தாலுகா செயலாளர் எஸ்.காமராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.சாமிநாதன், பால் உற்பத்தியாளர் சங்க மாநில செயலாளர் எம்.சிவாஜி, தாலுகா நிர்வாகிகள் சிங்காரம், ஆனந்தன், வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.