tamilnadu

img

கலால் வரி உயர்வே பெட்ரோல் விலையேற்றத்திற்கு காரணம்.... சென்னை ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு...

சென்னை:
கலால் வரியை உயர்த்துவதே பெட்ரோல் விலையேற்றத்திற்கு காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவிலை உயர்வை கண்டித்து வெள்ளியன்று (பிப்.19) சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை, மத்தியசென்னை மாவட்டக் குழு சார்பில் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு:மத்திய, மாநில அரசுகள் மாறிமாறி கலால் வரியை உயர்த்துவதால் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் விஷத்தை விட மோசமாக உயர்ந்துவருகிறது. சமையல் எரிவாயுவுக்கு வழங்கி வந்த மானியத்தை மத்திய அரசுரத்து செய்துவிட்டது. கலால் வரியை ரத்து செய்தால் 50 ரூபாய்க்கு லிட்டர் பெட்ரோல் கிடைக்கும். இதனை மறைத்துவிட்டு பிரதமர் ஏதேதோ காரணங்களை சொல்லுகிறார்.பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வந்துவிட்டால், குறிப்பிட்ட அளவிற்கு மேல் வரியை உயர்த்த முடியாது என்பதால் கொண்டுவர மறுக்கின்றனர். மக்களிடம் கொள்ளையடிக்க ஜிஎஸ்டியை அரசுபயன்படுத்துகிறது. கொள்ளையடிக்க தடையாக இருந்தால் அதை தவிர்த்து விடுகிறது.

உலகச்சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணை 105 லிருந்து 45 டாலராக குறைந்துவிட்டது. அதாவது 3 மடங்கு விலை குறைந்துள்ள நிலையில், காலால் வரிகளை மாற்றியமைப்பதன் மூலம், பெட்ரோல், டீசல்விலைகளை 3 மடங்கு உயர்த்தி உள்ளனர். பெட்ரோல் விலையை குறைப்ப தற்கு மாறாக, பேட்டரி வாகனங்களை வாங்க இலவச ஆலோசனை கூறுகின்றனர். அப்படியானால் பேட்டரிவாகனங்களுக்கு மத்திய அரசு மானியம் கொடுக்குமா?விலைகளை தீர்மானிக்கும் உரிமையை பெட்ரோலிய நிறுவனங்களிடமே மத்திய அரசு ஒப்படைத்துள்ளதால், விருப்பத்திற்கு விலையேற்றுகின்றனர். அதனை மத்திய அரசு தடுக்க மறுக்கிறது. அதானி, அம்பானி கொள்ளையடிக்க மக்களை மத்திய அரசு காவு கொடுக்கிறது, அதற்கு அதிமுக அரசு துதிபாடுகிறது. தமிழக அரசு கலால் வரியை ரத்து செய்தால் 4ல் ஒரு பங்கு விலை குறையும். அதை தமிழக அரசு செய்யுமா?சமையல் எரிவாயு பற்ற வைத்தால் எரியும் என்ற நிலைமாறி, அதன் விலையை கேட்டாலே அடிவயிறு எரிகிறது. அடுத்து மின்சார நிலையங்களை தனித்தனி கம்பெனியாக மாற்றி தனியாருக்கு கொடுக்கும் சட்டத்திருத்தத்தை

தொடர்ச்சி 4ம் பக்கம்... 

;