tamilnadu

img

விழுப்புரம்-கள்ளக்குறிச்சியில் சிறப்பான வரவேற்பு

விழுப்புரம்.ஜன.21- சென்னையில் நடைபெறும் சிஐடியு அகில இந்திய 16 வது மாநாட்டிற்காக, தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை உரிமையை பெற்றுத் தந்த புதுச்சேரி தொழிற்சங்க தியாகிகளை நினைவுபடுத்தும் வகையில் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட தியாகிகள் சுடர் பயணம் கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தை வந்தடைந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். அங்கு உரையாற்றிய பயணக்குழுத் தலைவர் வி.குமார் மாநாட்டின் நோக்கங்களை விளக்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, பொருளாளர் வி.பாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், பொருளாளர் ஏ.வீராசாமி,சர்க்கரை சம்மேளனச் செயலாளர் வி.உதயகுமார், கடலூர் மாவட்ட துணைச் செயலாளர் வி.திருமுருகன், நிர்வாகிகள் புருஷோத்தமன், ஆர்.சேகர், கே.அம்பிகாபதி, அருள் ஜோதி, எல்ஐசி ரமேஷ் உட்பட பலர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர், வாணாபுரம், தியாகதுருகம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

;