tamilnadu

img

எண்ணூர் அனல்மின் நிலைய பாதிப்புகள்.... அரசு நடவடிக்கை எடுக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை....

சென்னை:
சென்னையை ஒட்டிய எண்ணூர் அனல்மின் நிலையத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆய்வறிக்கை தயாரித்து வெளியிட்டனர்.

சென்னையை ஒட்டிய எண்ணூரில் தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல்மின் நிலையம் செயல் பட்டுகிறது. இந்த நிலையத்தில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் சட்டத்திற்குப் புறம்பாகவும், நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிராகவும் கொசஸ் தலை ஆற்றில் கழிமுகப் பகுதியில் கொட்டப்பட்டு வருவதாக அப்பகுதி மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், பூவுலகின் நண் பர்கள் சுந்தர்ராஜன், நீரியியல் வல்லுநர் கனகராஜ், சுற்றுச் சூழல் ஆர்வலரும் இசைக் கலைஞருமான டி.எம்.கிருஷ்ணா ஆகியோர்  எண்ணூர் அனல் மின் நிலையத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தயார் செய்துள்ளனர்.இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொசஸ்தலை ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு இந்த கழிமுக பகுதி வாயிலாக வெளியேறுகிறது. இதனை ஆக்கிரமித்து கட்டிட கழிவுகளையும், சாம் பல் கழிவுகளையும் அனல்மின் நிலையம் கொட்டி வருகிறது. இதனால் கழிமுக பகுதியின் சுற்றுச்சூழல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இறால் உள்ளிட்ட உயிரினங்கள் முற்றிலுமாக சாம்பலால் பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் அவை உண்பதற்கு தகுதியற்றவையாக மாறிவிட்டது.சாம்பல் கழிவுகளை சேப்பாக் கம் கிராமத்திற்கு எடுத்து செல்லும் கட்டுமானப் பணியும், வயலூர் பகுதியில் நிலக்கரி எடுத்துச்செல்ல கட்டப்பட்டுவரும் வழித்தடமும் எந்தவித சுற்றுச்சூழல் அனுமதியும் இல்லாமல் நடைபெற்று வருகின்றன.ஏற்கனவே எண்ணூர் அனல் மின் நிலையத்தின் சட்டத்திற்கு புறம்பான செயல்களை நீதிமன் றம் கண்டித்துள்ளது. தொடர்ந்து ஒரே தவறை வேண்டுமென்றே நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் எண்ணூர் அனல் மின் நிலையம் செய்து வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந் துள்ளனர். கொசஸ்தலை ஆறும் அதன் கழிமுக பகுதியும் முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது. இதனை ஆதாரத்துடன் அறிக்கையாக தயார் செய்துள்ளோம்.

இந்த அறிக்கையை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துறை சார்ந்த அமைச் சர் மற்றும் தலைமைச் செயலாளர், துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கொடுக்க உள்ளோம். மேலும், இதுபோன்று சட்டத் திற்கு புறம்பான செயல்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்தவேண்டும். விதிகளை மீறி செயல் பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.கழிமுக பகுதி மற்றும் கொசஸ் தலை ஆற்றை கழிவுகளில் இருந்து மீட்கவேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுகின்றோம்.உலகளவில் அனல்மின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. மின்சாரம் அத்தியாவசிய தேவை. எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ஒரு யூனிட் மின்சாரம் 6 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் மூலம் 2.90 ரூபாய்க்கு மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். அப்படி இருக்க இதுபோன்று சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஆலைகள் நமக்கு தேவையில்லை.தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதிய அரசு, கோரிக்கைகளை நிறைவேற்றும் என நம்புகிறோம். ஒருவேளை செய்யாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

;