tamilnadu

img

பொறியியல்: பொதுப்பிரிவு சேர்க்கை தொடங்கியது...

சென்னை;
பொறியியல் படிப்பில் சேருவதற்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டதை அடுத்து வியாழனன்று (அக். 8) தொடங்கிய  மாணவர் சேர்க்கை 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழகத்தில் பொறியியல்  படிப்பில் சேருவதற்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு கடந்த 1 ஆம் தேதி தொடங்கி, 6 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. சிறப்பு பிரிவில் உள்ள விளையாட்டுப்பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 500 இடங்களில் 277 இடங்களும், முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கப் பட்ட 150 இடங்களில் 122 இடங்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ஒதுக்கப்பட்ட 6 ஆயிரத்து 785 இடங்களில் 98 இடங்களும் நிரம்பி இருக்கின்றன. சிறப்பு பிரிவில் நிரம்பாத இடங்கள் பொதுப்பிரிவு இடங்களில் சேர்க்கப்படும்.

அந்த வகையில் பொதுப்பிரிவு மாணவர்களுக் கான கலந்தாய்வு  இதற்கான அட்டவணையை தமிழ் நாடு பொரியல் மாணவர் சேர்க்கை (டி.என்.இ.ஏ.) இணைய தளத்தில் வெளியிடப் பட்டிருக்கிறது. மொத் தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவர்களுக்கான 4 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.அதன்படி, 1 முதல் 12 ஆயிரத்து 263 தரவரிசையில் (கட்-ஆப் 199.667 முதல் 175 வரை) இருக்கும் மாணவர்களுக்கு 8 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.12 ஆயிரத்து 264 முதல் 35 ஆயிரத்து 167 வரையிலான தரவரிசையில் (கட்-ஆப் 174.75 முதல் 145.5 வரை) உள்ள மாணவர்களுக்கு 12 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரைக்கும் நடத்துகின்றனர்.

35 ஆயிரத்து 168 முதல் 70 ஆயிரத்து 300 வரையிலான தரவரிசையில் (கட்-ஆப் 145 முதல் 111.75 வரை) இருப்பவர்களுக்கு 16 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலும், 70 ஆயிரத்து 301 முதல் 1 லட்சத்து 10 ஆயிரத்து 873 தரவரிசை (கட்-ஆப் 111.5 முதல் 77.5 வரை) வரையில் உள்ளவர்களுக்கு 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.இதில் மாணவர்கள் முன்பணம் செலுத்துதல், விருப்ப கல்லூரிகள், பாடப்பிரிவுகளை தேர்வு செய் தல், தற்காலிக ஒதுக்கீடு மற்றும் அதனை இறுதி செய்தல் போன்றவற்றை செய்தபின்னர் இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட உள்ளது.அதேபோல் தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 8 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி நிறைவு பெற உள்ளது.