tamilnadu

img

ஊரடங்கு தளர்வு எதிரொலி...  தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்...

சென்னை 
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை லேசான வேகத்தில் குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு அதிக தளர்வுகள் கூடிய ஊரடங்கை கடந்த வாரம் நடைமுறைக்கு கொண்டு வந்தது. தளர்வு காரணமாக மக்கள் இயல்பு நிலை திரும்பியது போல முககவசம் அணியாமல் நடமாடி வருகின்றனர். பொதுப் போக்குவரத்தும் அமலில் இருப்பதால் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிகழ்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ள மாவட்டங்களின் விவரம்:

1. கள்ளக்குறிச்சி-128 (1-ஆம் தேதி நிலவரம்  - 115)

2. காஞ்சிபுரம்-71 (1-ஆம் தேதி நிலவரம்  - 68)

3. கரூர்- 46 (1-ஆம் தேதி நிலவரம் - 32)

4. மதுரை-94 (1-ஆம் தேதி நிலவரம் -  68)

5. நீலகிரி-90 (1-ஆம் தேதி நிலவரம் - 87)

6. பெரம்பலூர்-29 (1-ஆம் தேதி நிலவரம் - 22)

7. புதுக்கோட்டை-73 (1-ஆம் தேதி நிலவரம் - 66)

8. ராமநாதபுரம்-19 (1-ஆம் தேதி நிலவரம் -  14)

9. விழுப்புரம்-70 (1-ஆம் தேதி நிலவரம் - 65)

10. சிவகங்கை-66 (1-ஆம் தேதி  நிலவரம்  - 65)

11. தென்காசி-29 (1-ஆம் தேதி நிலவரம் - 28)

12. தஞ்சை - 248 (1-ஆம் தேதி நிலவரம் -  197)

13. தேனி-48 (1-ஆம் தேதி நிலவரம் - 45)

14. திருப்பத்தூர்-32 (1-ஆம் தேதி நிலவரம் -  31)

15. கடலூர்-127 (1-ஆம் தேதி நிலவரம் - 102) 

 

;