tamilnadu

img

அடுக்குமாடி குடியிருப்புகளில் மின் இணைப்புக்கான கட்டணம் குறைப்பு!

அடுக்குமாடி மற்றும் பொது குடியிருப்புகளில் மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8-இல் இருந்து ரூ.5.50ஆக குறைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று அங்கு அரசு அலுவலகங்கள் எவ்வாறு செயல்படுகின்ற என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். நான்கு மாவட்டங்களுக்கு சேர்த்து ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று செங்கல்பட்டில் நடைபெற்றது.

அதில், அடுக்குமாடி மற்றும் பொது குடியிருப்புகளில் மின் இணைப்புக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8-இல் இருந்து ரூ.5.50ஆக குறைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 10 வீடுகளுக்கும் குறைவாகவும், 3 மாடிகளுக்கும் மிகாத லிஃப்ட் வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் மின்கட்டண சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.