tamilnadu

img

சூரிய கிரகணத்தின்போது மூடநம்பிக்கைகள் முறியடிப்பு

சென்னை,டிச.26 சூரிய கிரகண மூட நம்பிக்கைகளை முறிய டிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கழ கம் சார்பில் வியாழனன்று (டிச.26) காலை நடத்த ப்பட்டது.  நிகழ்ச்சியை திராவிட மாணவர் கழக மாநில செய லாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் ஒருங்கிணை த்தார். செந்தமிழ் சேகுவேரா அறிவியல் விளக்கங்களை எடுத்துரைத்தார். இளை ஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராள மானவர்கள் பெரிதும் ஆர்வத்துடன் திரண்டிருந் தார்கள்.  கிரகணத்தின்போது சூரியனை பாது காப்பான கண்ணாடியால் அனைவரும் கண்டு பயன் பெற்றனர். சூரியகிரகண மூட நம்பிக்கைகளை முறிய டிக்கும் நிகழ்வில்தமிழர் தலைவர் கி.வீரமணி  பங்கேற்று சிற்றுண்டி அருந்தி னார்.கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சாரச் செய லாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, துணைப்பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி,  பகுத்தறிவா ளர் கழகப் பொதுச்செயலா ளர் இரா.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பொறுப்பாளர் கள், கழகக் குடும்பத்தினர், பொதுமக்களும் திறந்த வெளியில் உணவருந்தி மூடநம்பிக்கை முறியடிப்பு நிகழ்வில் பங்கேற்றனர். கருவுற்ற பெண்கள் வெளியே வரக்கூடாது என்கிற மூடநம்பிக்கையை முறியடித்து சீர்த்தி - பகலவன் இணையர் தமிழர் தலைவருடன் சூரிய கிரகண த்தின்போது உணவருந்தினா ர்கள்.“செய்வதையே சொல்கிறோம், சொல் வதையே செய்கிறோம்“ என்று மூடநம்பிக்கை முறிய டிப்பு நிகழ்ச்சி எழுச்சியுடன் பெரியார் திடலில் கழகத் தோழர்களால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.வானவியல் காட்சி திரையிடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. பெரியார் பிஞ்சுகளுக்கான ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டது.

;