tamilnadu

பேட்ஜ் வைத்துள்ள ஓட்டுநர்கள் அனைவருக்கும் நிவாரணம் ஆட்டோ சங்க கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை, ஜூன் 4- பொதுவில்லை (பேட்ஜ்) வைத்துள்ள அனைவருக்கும் தமிழகஅரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு வலி யுறுத்தி உள்ளது. இது தொடர்பாக வியாழனன்று (ஜூன் 4)  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பால சுப்பிரமணியம், ஏ.எல். மனோகரன், ஜெய கோபால் (சிஐடியு), பாட்ஷாபாபு (எல்பிஎப்),  மு.சம்பத் (ஏஐடியுசி) உள்ளிட்டு கூட்ட மைப்பு நிர்வாகிகள் வழங்கினர். அந்த மனு வின் சுருக்கம் வருமாறு: நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு அறி வித்த 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அனை வருக்கும் வழங்க வேண்டும், ஆட்டோ ஓட்டு நர்களுக்கான நிவாரணத்தை  15 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்யாத  முடித்தி ருத்தும் தொழிலாளர்கள், நெசவாளர்க ளுக்கு வழங்கியது போன்று பொதுவில்லை  வைத்துள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்க ளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். தகுதிச்சான்று புதுப்பித்தலை ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்க வேண்டும், அனுமதி உரிமம் (பர்மீட்), சாலைவரி செலுத்தவும் ஓராண்டு கால அவகாசம் அளிக்க வேண்டும்,  பொதுவில்லை, ஓட்டுநர் உரிமத்தை கட்டண மின்றி புதுப்பிக்க வேண்டும், ஆட்டோக்க ளுக்கான இன்சூரன்ஸ் காலம் முடிந்திருந்தா லும் 2020ம் ஆண்டு முழுவதும் அபராதம் விதிப்பது, பறிமுதல் செய்வது போன்ற நட வடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.  இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.

;