tamilnadu

img

திராவிடப் பள்ளி துவக்கம்

சென்னை
திராவிட இயக்கத்தின் வரலாற்று சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும்வகையில் திராவிட பள்ளியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி, திராவிட இயக்க சாதனைகளை கற்பிக்கும் முயற்சியாக திராவிட பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

திராவிட பள்ளி மூலம் திராவிட இயக்கத்தின் வரலாறு, கோட்பாடுகள், சாதனைகள் ஆகியவை இணையம் மற்றும் அஞ்சல் வழியாக மாணவர்களுக்கு கற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கழக துணை பொதுச் செயலாளர் க.பொன்முடி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுப.வீரபாண்டியன், ஆகியோர் உடனிருந்தனர்.முன்னதாக, சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியாரின் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப் படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

;