tamilnadu

img

அரசு விழாவுக்கு திமுக எம்பி, எம்எல்ஏவை அழையுங்கள்: ஸ்டாலின் கோரிக்கை

சென்னை:
அரசு விழாக்கள், ஆய்வுக்கூட்டங்களுக்கு திமுக எம்பி, எம்எல்ஏக்களை அழைக்க வேண்டும் என அதிமுக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் நடந்த அரசு விழாவிற்கு அந்த தொகுதியின் திமுக மக்களவை உறுப்பினர் செந்திலை அழைக்கவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், மக்களின்பாதிப்புகளை மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்காமல், முதலமைச்சர் யாரிடம் கேட்க மாவட்டங்களுக்கு போகிறார் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக எம்பி, எம்எல்ஏக் களை வேண்டுமென்றே புறக்கணித்து வரும் அதிமுக அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக பிரதிநிதிகளை அழைத்து மக்கள் குறைகளை எடுத்துரைக்க வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்றும் மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் போக்கை முதல்வர் அதிமுக அமைச்சர்கள் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

;