tamilnadu

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அஞ்சல் மூலம் நிவாரணம் விநியோகம்

கடலூர், மே 21 - கடலூரில் மாவட்டத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தபால்துறை மூலமாக நிவாரணதொகை வழங்கப்பட்டது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 17 வகை யான அமைப்புசாரா நல வாரியங்களில் பதிவு  செய்துள்ள தொழிலாளர்களுக்கு, அவரவர் வங்கிக் கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் செலுத்  தப்படும் என்று அரசு அறிவித்தது. எனினும், வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைத்த வர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. வங்கிக் கணக்கு இல்லாத அமைப்புசாரா நல வாரிய உறுப்பினர்களுக்கு தபால் துறை யின் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி  மூலம் (ஜீரோ பேலன்ஸ்) கணக்கு தொடங்கி  அதன் மூலம் நிவாரண உதவி வழங்கப்படு கிறது.

கடலூர் மாவட்டத்தில் வங்கி கணக்கு  இல்லாத 28 ஆயிரத்து 646 தொழிலாளர்களின் பட்டியல் அனுப்பப்பட்டு, இந்தியா போஸ்ட்  பேமெண்ட் வங்கியில் கணக்கு தொடங்கும்  பணி நடைபெற்று வருகிறது. அதன்படி  கடலூரில் சுமார் 21 ஆயிரம் தொழிலாளர்க ளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால்  ஊழியர்கள் கணக்கு தொடங்கி உள்ளனர். கடலூர் கோட்டத்தில் 15 ஆயிரம் கணக்கு கள் தொடங்கப்பட்ட நிலையில் முதற்கட்ட மாக 164 பேரின் தபால் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்பட்டு அதற்கான ரசீது  வழங்கும் நிகழ்ச்சி கடலூரில் புதனன்று (மே 20) நடைபெற்றது. தபால் கோட்ட கண்காணிப்பாளர் குண சேகரன், உதவி கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப், தலைமை தபால் அலுவலலர் கோவிந்தராஜன், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கடலூர் கிளை முதுநிலை  மேலாளர் சுகுமார், விற்பனை மேலாளர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிவாரணத் தொகை கிடைக்காத அமைப்பு  சாரா நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் தங்களது ஆதார் அட்டை, நல வாரிய அடையாள அட்டை மற்றும் செல்போன் எண்களுடன் அருகில் உள்ள  தபால் நிலையங்களுக்கு சென்று, பட்டியலில்  தங்களின் பெயர் இருந்தால் உடனடியாக கணக்கு தொடங்கி, நிவாரண நிதியை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

;