வேலூர், ஜூலை 8- திருப்பத்தூரில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி, காணிநிலம் மு.முனி சாமி, சித்த வைத்தியர் சீனிவாசன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் சித்திரங்கள் நிரம்பிய குளம் ஒன்றும், இரண்டு உடன்கட்டை நடுகற்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து க.மோகன்காந்தி கூறியதாவது: வாணியம்பாடியை அடுத்த வடசேரி கிராமத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க சித்திரக்குளமும் இரண்டு உடன்கட்டை நடுகற் களும் கண்டறியப்பட்டுள்ளன. சதுர வடிவில், படித் துறைகள் நிரம்பிய சித்திரக்குளம் ஒன்று வடசேரியில் உள்ளது. இக் குளத்தின் நடுவே கிணறு ஒன்றும் உள்ளது. தற்போது நீரின்றி வறண்டு, பாதுகாப்பின்றி இக்குளம் காட்சியளிக்கிறது. கி.பி.15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாக இக்குளத்தைக் கணிக்க முடிகிறது. பண்டைய தமி ழரின் சிற்பக் கலைத் திறனை எடுத்துரைக்கும் வகையில் இக்குளம் அமைந்துள்ளது. அரசர்களின் தோற்றம், ஆண் பெண் உறவு, நீண்ட பாம்பின் வடிவம், ஆமை, மீன் உருவங்கள் என ஏராளமான சித்திரங்களைத் தாங்கி இக்குளம் அமைந்துள்ளது. குளத்தின் மேற்பகுதியில் கோயில் உள்ளது. இக்கோயி லின் வெளியே நாயக்கர் காலத்தைச் சேர்ந்த இரண்டு உடன் கட்டை நடுகற்களும் உடைந்த நிலையில் ஒரு நடுகல்லும் காணப்படுகின்றன. இரண்டு நடுகற்களும் அழகான பெரிய பலகைக் கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. வீரன் ஒரு வன் வலது கையில் வாளையும், இடது கையில் குறுவாளை யும் தாங்கி நிற்கிறான். அவன் அருகாமையில் வீரன் இறந்த தற்காகத் தானும் உடன்கட்டை ஏறி உயிர் விட்டதற்கான அடை யாளத்தோடு பெண் ஒருத்தி இடது கையில் தாமரை மொட்டு போன்ற குறியீட்டையும் வலது கையில் கள்குடம் ஒன்றை யும் தாங்கி நிற்கிறாள். இரண்டாவது நடுகல்லில் உள்ள வீரன் இடது பக்கம் கொண்டை முடித்து இடது கையைத் தொங்க விட்டுக்கொண்டு வலது கையைக் கீழே தொங்க விட்டு அதில் கத்தி ஒன்றை வைத்துள்ளான். வீரனின் வலது பக்கத்தில் அவனோடு சேர்ந்து உயிர்விட்ட அவனுடைய மனைவியின் சிற்பமும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்பெண் இடது பக்கம் கொண்டையிட்டு இடது கையைத் தொங்கவிட்டுக் கொண்டும், வலது கையில் கள் குடத்தை ஏந்தி யும் காட்சி தருகிறார். இவ்விரு வீரர்களும் படைத் தலைவர்க ளாக இருக்க வேண்டும். இவ்வூரில் நடைபெற்ற போரின் போது அவர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களின் மனைவியரும் அவர்களோடு சேர்ந்து உயிர்விட்ட செய்தியை இக்கற்கள் கூறுகின்றன. இக்குளத்தைப் போன்ற சிறப்பு டைய சித்திரக்குளம் ஒன்று திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடிக்கு அருகே உள்ள சின்னயன்பேட்டையில் இருப்பது குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.